Monday, 16 September 2013

ஆவிகள்----உண்டு,இல்லை என்று பல்வேறு ஆய்வுகள் ,முடிவுகள் என்று வெளி வந்து கொண்டு இருந்தாலும் சில நேரங்களில் சில தாங்க முடியாத கொடுமையான நிகழ்வுகளைப் பார்க்கும் போது,படிக்கும் போது உண்மையாக அப்படி ஒன்று இருந்தால் நன்றாக இருக்குமோ என்று நான் நினைப்பது உண்டு .....போன வெள்ளியன்று 13ம் தேதி ஒருவரது நேரடி அனுபவம் கேட்ட போது ஒவ்வொரு மறைந்த உயிர் மீதும் பயம் போய்,மதிப்பும் மரியாதையும்,பக்தியும் வந்து விட்டது எனலாம் ....அந்த நபர்,வயது 28 ,இந்தியாவில் இருந்து இங்கு வந்து வேலை செய்பவர்,அவர் இங்கு வந்த புதிது அப்போது அவர் வயது 25,தன் மேலதிகாரி ஒரு சீனர்,இந்த நபர் இங்கு கட்டிட வேலைக்கு வந்து இருப்பவர்வந்த புதிது என்பதால் இவருக்கு வேலை சொல்லிக் கொடுக்கும் பொறுப்பு அந்த உயர் சீன அதிகாரி வசம்,இவரோடு மிக நன்றாக பழகுவராம்ஒரு நாள் இவரிடம் கொஞ்சம் பணம் கொடுத்து அவருக்கு பஜ்ஜியும்,டீஉம் வாங்கிக் கொண்டு ,இந்த பையனையும் சாப்பிட்டு விட்டு வரச்  சொல்லி இருக்கிறார் ,ஐவரும் அவ்வாறு ரொட்டி சாப்பிட்டு விட்டு ,அவருக்கும் பஜ்ஜியும்,டீயும் வாங்கிக் கொண்டு வந்து கொண்டு இருந்து இருக்கிறார்,அந்த அதிகாரி இவர் வருவதைப் பார்த்து விட்டு எழுந்து வேலை செய்யும் இடத்தை சுற்றிப் பார்த்துக் கொண்டு அங்கு வேலை செய்யும் ஆட்களை எண்ணிக் கொண்டு இருந்து இருக்கிறார் அப்போது திடீரென்று அவர் நின்று கொண்டு இருந்த இடத்தின் மணல் சரிந்து அவர் கீழே விழ ஆரம்பித்து இருக்கிறார் ,இந்த பையன் அந்த இடத்திற்கு ஓடி போகும் முன்னே அவர் கிடுகிடுவென்று கீழே போய் அவர் தலை வேறு உடல் வேறு என்று பிரிந்து விட்டதாம்,இந்த பையன் கை,கால் நடுங்க ஆரம்பித்து பின் ஒரு வழியாக அனைத்து விசாரணைகளும் முடிந்த பிறகு அன்று  இரவு,இந்த பையனால் தூங்க முடியவில்லை ஒரு வழியாக தூங்க முற்பட்ட போது அந்த அதிகாரி இவரிடம் வந்து கேட்டு இருக்கிறார் "எனக்கு பஜ்ஜியும்,டீயும் வாங்கி வந்தாயா?நீ சாப்பிட்டாயா?"அன்று முதல் இன்று வரை அந்த பையன் எது வாங்கி சாப்பிட்டாலும் அந்த அவர் உட்கார்ந்து இருந்த மரம் பக்கத்தில் கொஞ்சம் பகிர்ந்து வைத்து விட்டு தான் சாப்பிடுவாராம்,இவருக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வந்து இவர் புலம்பும் போது அவர் சொல்வாரம்"டோன்ட் வொர்ரி "எல்லோரும் மிகவும் ஆச்சரியமாக கேட்பார்களாம் யாரிடம் பேசுகிறாய் என்று ?அவரிடம் சொல்லிய பிறகு இவரது பிரச்சனை கொஞ்சம் தீர்வு கிடைப்பது போல் ஒரு தெம்பு இவருக்கு வருமாம் ...உண்மையில் ஆவிகள் உண்டுங்க என்று அவர் சொன்ன போது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.......ஆனந்த புரத்து வீடு  ..படம் உண்மை தான் போல......

No comments:

Post a Comment