Wednesday 31 July 2013

இன்று ஒரு உணவு அல்லது மருத்துவக் குறிப்புன்னு சொல்லிக் கொள்ளலாம் ...எல்லாம் நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் ரேஞ்சுதான் ..வேறு ஒன்றும் இல்லை ..எல்லோருக்கும் இது பொருந்துமா என்றும் எனக்குத் தெரியவில்லை இருந்தாலும் அனைவரும் கொஞ்சம் ட்ரை பண்ணிப் பாருங்களேன் ....
1முழு நெல்லிக்காய் +1 சிறிய வெங்காயம் +1 பல் பூண்டு +2 டீஸ்பூன் அளவு கருவேப்பில்லை பொடி+1 டீ ஸ்பூன் வெந்தையப் பொடி +1 டீஸ்பூன் அளவு மிளகுத்தூள் +1 டீ ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் +2 or  3 டீ ஸ்பூன் அளவு தேன் கலந்து காலையில் எழுந்தவுடன் பல் துலக்கி ,காபி குடிக்கும் முன் சாப்பிட்டு வந்தால் சளி ,காய்ச்சல் ,மலச்சிக்கல் ,சில வகை தோற்று நோய்கள் நம்மை அவ்வளவு எளிதாக அண்டுவதில்லை ....##இது நானும் என் கணவரும் பயன் கண்ட விஷயம் ...கடந்த 9 மாதங்களாக பின்பற்றி வருகிறோம் ,என் கணவருக்கு அவரது ரத்தத்திலுள்ள கெட்ட கொழுப்பின் அளவு குறைந்து விட்டதாக சொல்லி அவர் 4 மாதங்களாக அதற்க்காக எடுத்து வந்த மாத்திரைகளை இங்குள்ள மருத்துவர்கள் நிறுத்தி விட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் ......

Monday 29 July 2013


தோழியின்  தோழியிடமிருந்து பகிந்து கொண்ட விஷயம் ........சம்பந்தப்பட்ட இருவரின் நலம் கருதி பெயரும் ,ஊரும் வெளியிட வில்லை,அந்த ஆணும் பெண்ணும் முதலில் பள்ளியில் அறிமுகமாகி ,நட்பாகி பின்பு அது காதல் ஆனது ,காதல் கல்லூரி ,வேலை என்று இருவரும் இடம் மாறிய பின்பும் தொடர்ந்தது ,இரண்டு பேரின் வீட்டார் மட்டுமல்ல அவர்கள் இருந்த ஊருக்கே தெரியும் அவர்கள் இருவர் காதலிப்பதும் ,மனம் முடித்துக் கொள்ளப் போவதும்,..12 வருடங்கள் நன்கு பழகிய ,புரிந்த காதல் ,இருவரும் ஒருவழியாக தம் தம் வேலையில் ஒரு நல்ல நிலைக்கு வந்த பின்னர் மனம் முடிக்க நினைத்து ,அனைத்து ஏற்பாடுகளும் செய்து ,திருமண நாளும் வந்தது ,மணமகள் மேடையில் காத்திருக்க மணமகனைக் காணவில்லை ,அனைவரும் தேடி ஒருவழியாக மாலை நேரம் அவரை அவரது அலுவக கழிப்பறையில் ஒளிந்திருந்ததைக் கண்டு பிடித்தார்கள் ,காரணம் கேட்டதற்கு "என் அம்மாவிற்கு பெண்ணைப் பிடிக்கவில்லை ,அதனால் எனக்கு இந்தப் பெண்ணோடு கல்யாணம் வேண்டாம் "தோழி செய்தி கேட்டு நிலை குலைந்து போயிருந்தார் சில காலம் ,பின்பு தேறி தற்போது மிக தொலைவான நாட்டில் மிகப் பெரிய பதவியில் இருக்கிறார் ,திருமணம் செய்து கொள்ளவில்லை ,வயதும் கடந்து விட்டது ,அவரோ அவர் அம்மா பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார் ,அந்த பெண்ணோ 2 வருடங்கள் கழித்து இவரைப் பிடிக்கவில்லை என்று சொல்லி விவாகரத்து பெற்றுக் கொண்டார் ,வேறு யாரும் இவருக்கு பெண்ண தர மறுத்ததால் அவர் அம்மாவோடு தனியாக வசிக்கிறார் அதே ஊரில் ....####இந்த நிகழ்வைக் கட்ட பின்பு எனக்குத் தோன்றியது "தெய்வம் நின்று கொல்லும் "என்பது இது தானோ ???

Thursday 25 July 2013

சமீபத்தில் மிகவும் பரபரப்பாக தமிழகத்தில் பேசப்பட்ட ,பாதித்த ஒரு நிகழ்வு -----
நான் சாதி,மதம்,இனம் ,காதலுக்கு எதிரி என்கிற நிலையில் இதை பகிரவில்லை ,என் கண்ணோட்டம் அந்த இரு பிள்ளைகளின் பெற்றோர் பற்றியதே ..எது காதல்?புரியாமல் புரிந்தார் போலும்,தெரியாமல் தெரிந்தார் போலும் நடந்து கொள்வதா?என்ன காரணம்?தற்போது வெளியிடப்படும் ஒரு சில கேவலமான சினிமாக் காட்சிகளா?தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் கூட தற்போது நேரடியாகவே சில நடனக் காட்சிகளில் அதிக நெருக்கம் காண்பிப்பதா?எதில் இல்லை ஆபாசம்?இவை தான் காரணம் என்றால் இன்னும் எவ்வளவு காலம் அவர்களை மட்டும் குறை சொல்லி காலம் தள்ளுவார்கள்?ஏன்?தற்போதுள்ள பிள்ளைகள் எல்லோரும் நன்கு படிக்கிறார்கள் ,அதிகம் தெரிந்து கொள்கிறார்கள் அப்படி இருக்க இந்த விஷயத்தில் மட்டும் ஏன் இந்த அளவு அறியாமை?தற்கொலையும் ஆசிட் வீச்சும் எதற்கு தீர்வு?அந்த பையன் செய்தது தற்கொலையா?கொலையா?என்பது வேறு விஷயம் ,ஆனால் அந்த பையன் இறந்து போனதன் மூலம் ஒரு பெண்ணை உயிரோடு சாகடித்து விட்டு சென்று இருக்கிறான் என்று தான் சொல்ல முடியும் ,மனதில் அவன் மேல் முழு நம்பிக்கை இருந்ததால் முதலில் வீட்டை விட்டு வந்த பெண்ணிற்கு ,அதே நம்பிக்கை அந்த பையனிடம் மறுபடி கொண்டு வந்து சேர்க்கும் என்பதை அவன் எப்படி மறந்தான்?அப்படி என்றால் அவனுக்கு அவன் அன்பின் மேல் நம்பிக்கை இல்லை என்று தானே அர்த்தம் ,தந்தையின் மறைவு அந்த பெண்ணை மிக பாதித்துள்ளது என்பதை  கண்கூடாகப் பார்த்தும்,உணர்ந்தும் இருந்த அந்த பையனுக்கு தானும் அதே போல் ஒரு தண்டனை அந்த பெண்ணுக்கு கொடுக்கிறோம் என்பது மறந்து போனது ஏனோ?இதுவும் ஒரு வகையில் ஒரு கொடூரப் பழி வாங்கல் என்று தான் சொல்ல முடிகிறது ....அவர்கள் இருவரது பெற்றோர் நிலை கண்டிப்பாக யாராலும் தேற்றி விட முடியாதிருக்கும் ,ஒரு பிள்ளை பெற்றது முதல் ஒவ்வொரு நிலையிலும் எவ்வளவு கனவு,ஆசை,எதிர்பார்ப்பு பெற்றவர்களிடம் ..பிள்ளைகள் உடல் நலமில்லாமல் மறைந்து விட்டால் கூட கொஞ்ச நாளில் தேற்றிக் கொள்ளும் தாயின் மனம் இது போன்ற நிகழ்வுகளினால் வந்த இழப்பை எப்படி மறப்பது?மன்னிப்பது?பள்ளி பருவத்தில் காதலித்து பெற்றோர் எதிர்ப்பால் திருமணம் மறுத்து வெளிநாடு சென்று விட்டு அதே பெண்ணை அவளது 40வது வயதில் ,கான்செர் காரணமாக கர்ப்பப்பை நீக்கிய பின்பும் இந்திய வந்து மணந்து கொண்ட ஒரு ஆண் மகனை எனக்குத தெரியும்,கட்டிய மனைவி ஒரு மகனைப் பெற்றபின் பிரிந்து சென்று 7 வருடங்கள் கடந்தும் அந்த மனைவிக்காக காத்திருந்து மகனை வளர்த்த ஒரு இள வயது ஆடவனையும் தெரியும் ,இந்த வருடம் அந்த மனைவி அவள் கணவனோடும் குழந்தையோடும் வந்து சேர்ந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறாள் ...இவர்கள் செய்தது ,காத்திருந்தது எந்த நம்பிக்கையில்?இதன் பெயர் காதல் இல்லையா?
எனக்கு திருமணம் ஆகும் முன் காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து கொண்டு இருந்த 2 வெவ்வேறு தம்பதிகள் சொன்ன அட்வைஸ் "'மறந்தும் காதல் திருமணம் மட்டும் செய்து கொள்ளாதே ,பெற்றோர்களைப் பகைத்து விட்டு ""

Tuesday 23 July 2013

நேற்று ஒரு இனிய  மறக்க முடியாத நிகழ்வு ..எனக்குத் தெரிந்த ஒரு தோழியைப் பார்க்க இங்குள்ள முதியோர்  இல்லம்   சென்று இருந்தேன்,அங்கு இருந்த  ஒரு சீனப் பாட்டி என்னை அருகில் வருமாறு அழைத்தார் "எனக்கு
 உன் தலை அலங்காரம் பிடித்துள்ளது ,எனக்கும் அது போல் செய்து விடுகிறாயா?என்றார் "சரி என்று பின்னல் போட்டு அதை மேல்நோக்கி கொண்டை போல் போட்டு விட்டேன் ,கண்ணாடியில் தன்னைப் பார்த்து விட்டு அந்தப் பாட்டிக்கு சந்தோசம்  தாங்க முடியவில்லை ,எனக்கு நன்றாக இருக்கிறதா  என்று என்னிடம் மட்டுமல்ல ,அங்கு இருந்த சக நண்பிகளிடம் கேட்டு விட்டு ,என்னிடம் நீ இங்கு எத்தனை மணி வரை     இருப்பாய்  என்று கேட்டார் ,சொன்னேன் ,"நான் ஏன் உன்னை எனக்கு தலை அலங்காரம் செய்ய சொன்னேன் தெரியுமா?என்நண்பன் என்னைப் பார்க்க  ஆஸ்திரேலியாவிலிருந்து வருகிறான் ,அவன் வரும் போது,நான் அழகாக இருக்க வேண்டாமா?அதனால் தான்
என்றார் வெட்கத்தோடு ...பிறகு ஒரு 1 மணி நேரம் ஆகி இருக்கும் நான் வேறு ஒரு இடத்தில் என் தோழியோடு ,அதே இல்லத்தில் தான் இருந்த போது ,என் தோழியின் பெயரோடு என்னையும்  சேர்த்து வரச் சொல்லி ஒலிபெருக்கியில் அழைத்தார்கள் ,போனேன் அங்கு அந்தப் பாட்டி அவர் நண்பரிடம் என்னை அறிமுகம் செய்து விட்டு சொல்கிறார் "என்னை அழகாக்கியவள் "அதோடு அவரும் அந்த நண்பரோடும் என்னோடும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் "நான் உனக்கு நன்றி சொல்ல மாட்டேன் ,நீ உனக்கு எப்போவெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போது என்னைப் பார்க்க வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் ,சம்மதித்தேன் "மனம் முழுக்க நிறைவோடு ....:)

###உலகம் அழகாகத் தோன்றுவது கண்டிப்பாக அழகான மனம் கொண்ட மனிதர்களோடு வாழும் போது தான் என்று புரிகிறது .....
வீட்டில் ஒரு சிறு மனஸ்தாபம் ,சிலரைப் பிடிக்காமல் போகும் போது வேண்டுமென்றே முகம் கூட கழுவாமல் எதிர்கொள்பவர்கள் ,மிகச் சிறிய தலை வலியை கூட   பெரியதாக்கி பிரதாபிப்பவர்கள் மத்தியில் தான் மிக சிறிது காலம் தான் வாழப் போகிறோம் என்று தெரிந்தும் அந்தசிறு வயது முதல் பழகிய  நண்பர்  முன் இந்தப் பாட்டி தன்னை அழகாக காட்டிக் கொள்ள வேண்டும் என்று முனைப்பெடுத்துக்  கொண்டது   என்னை மிகவும் யோசிக்கவும் ,கற்றுக் கொள்ளவும் வைத்தது .......  
   ,

Saturday 20 July 2013

செய்து பார்க்க ....

புரதச் சத்து மிகுந்த சோயா வடை;;;சோயா உருண்டைகள் 1 கப் + கொஞ்சம் கடலைப் பருப்பு +கொஞ்சம் பாசிப் பருப்பு +கொஞ்சம் துவரம் பருப்பு +2 பூண்டுப் பல் +மிக சிறிதளவு சோம்பு +4 அல்லது 5 மிளகாய் வத்தல்கள் +உப்பு +சிறிதளவு கறிவேப்பில்லை --இவை தேவையான பொருட்கள் செய்முறை ;;சோயா உருண்டைகளை மட்டும் தனிப் பாத்திரத்தில் போட்டு சுடுநீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்துப் பின் ,நன்கு பிழிந்து விட்டு மறுபடி குளிர்ந்த நீரில் போட்டு கழுவி வைத்துக் கொள்ள வேண்டும் ,வடைக்கு சாதாரணமாக அரைப்பது போல் பருப்பு வகைகளை முதலில் அரைத்துக் கொண்டு பிறகு சோயா உருண்டைகளோடு ,பிற பொருட்களையும் சேர்த்து கெட்டியாக அரைத்து வைத்துக் கொண்டு எண்ணையில் பொறித்து எடுக்கலாம் ...சுவையாக இருக்கும் ,சில பிள்ளைகள் சோயாவை அவ்வளவாக விரும்ப மாட்டார்கள் ,அவர்களுக்கு இது போல் செய்து கொடுக்கலாம் .....தயவு செய்து இரண்டு முறைகளுக்கு மேல் பயன் படுத்திய எண்ணையை பயன் படுத்த வேண்டாம் ,ஏனென்றால் அது யாருடைய உடல் நலத்திற்கும் நல்லதல்ல .....

Friday 19 July 2013

சிங்கப்பூருக்கு குடும்பத்தோடு குடி பெயர்ந்து கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகி விட்டது ,இதுவரை இப்படி ஒரு சம்பவம் இங்கு நடந்தது இல்லை ,பட்டப் பகலில் எல்லோர் முன்னிலையிலும் அப்பா ,மகன் என இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர் ,அப்பா தொழில் அதிபர் ,மகன் அரசாங்க வேலையில் இருப்பவர் ,வயது 42,சந்தேகத்தின் அடிப்படையில் பக்கத்து நாட்டுக்கு தப்பிச் சென்ற கொலையாளியை (?)இரண்டு நாட்களுக்குள் கைது செய்து விட்டார்கள் ,கொலை செய்யப் பட்டவர்களும் ,பிடிபட்டவரும் வேறு வேறு இன,மதத்தைச் சேர்ந்தவர்கள் ,பிடிபட்டுள்ளவர் மிகப் பெரிய நிலையிலுள்ள ஒரு காவல் அதிகாரி ,போன மாதம் அந்த கொலையுண்ட தொழில் அதிபரின் தொழிற்சாலையில் நடந்த ஒரு திருட்டு சம்பவத்தை கையாண்ட காவல் அதிகாரி இவர் என்பதைத் தவிர இவர்களுக்குள் எந்த வித தொடர்பும் இல்லை ..ஏன் ,எதற்கு?என்கிற காரணம் தெரிய என்னோடு சேர்ந்து அனைவரும் ஆவலாக உள்ளனர் ,அமைதி காக்கின்றனர் ,இங்கு யாரும் இதனை தன் சுய லாபத்திற்காக
மக்களைதூண்டி விட்டு அந்த நெருப்பில் குளிர் காய வில்லை ,பொதுச் சொத்துக்கள் நாசமாகவில்லை,வேலை நிறுத்தம் இல்லை,அடுத்த இனத்தை வெட்டி சாய்க்க கிளம்பவில்லை "இன்று நான் உழைத்தால் ,நாளை என் பிள்ளைகள் உழைக்கும்,ஒற்றுமை காக்கும் என்கிற நல்ல எண்ணமும் ,உண்மை கண்டிப்பாக வெல்லும் என்கிற நம்பிக்கை ,கண்டிப்பாக அரசாங்கம்
உரிய.நடவடிக்கை எடுக்கும்" என்றும் சொல்லி அடுத்த வேலையைப் பார்க்க கிளம்புகின்றனர்....

Tuesday 16 July 2013

இந்த பதிவு கொஞ்சம் சிரிக்கவும் ,சற்று சிந்திக்கவும், செயற்படுத்தவும் மட்டுமே -- யாரையும் பழி சொல்வதோ ,குறிப்பிட்டோ சொல்லவில்லை ,எல்லோருக்கும் குழந்தைகள் உண்டு அவர்களிடம் இது போல் சொல்ல வேண்டாம் என்று ஒரூ சின்னவேண்டுதலோடு.ஏனென்றால் இது நான் .--- என் அப்பாவின் அப்பா (தாத்தா)விவசாயி,விஷகடி மருத்துவர் ,கோவில் பூசாரி அவரைப் பார்க்க எப்போதும் ஆட்கள் வீட்டுக்கு வந்த வண்ணம் இருப்பார்கள் ,அப்போது எனக்கு வயது 7,ஒரு பெரியவர் மிக கருப்பாய் மிக உயரமாய் ,மிக பருமனாய் பெரிய மீசை வைத்திருப்பார் ,அவர் கண்கள் எப்போதும் சிவப்பாக இருக்கும் ,வாயில் எப்போதும் வெற்றிலையும் ,புகையிலையும் போட்டு மென்று கொண்டே இருப்பார் ,அவர் என் தாத்தாவைப் பார்க்க அடிக்கடி வருவார் ,வரும் போதெல்லாம் என் கைபிடித்து இழுத்து தன பக்கம் வைத்து கொள்வார் ,நான் விடுபட திணறும் போது"உன்னை நான் தான் கல்யாணம் செய்துகொள்ளப் போகிறேன் நாளைக்கு வந்து தூக்கிப் போய் விடப் போகிறேன் ,அப்போ என்ன செய்வாய்?"என்று கேட்டு சிரிப்பார் ,வீட்டில் எல்லோரும் நான் அப்போது அழுவதைப் பார்த்து சிரிப்பார்கள் ,என் அம்மா அப்படி எல்லாம் இல்லைடா,சும்மா விளையாட்டு என்று சொன்னாலும் நான் சமாதானம் அடைந்து விடுவதில்லை ,மிகவும் பயப் படுவேன் வீட்டில் நுழைந்தவுடன் அந்த தாத்தா என்னைத்தேடி வந்து விளையாட்டாக பயமுறுத்த ஆரம்பிப்பார் ,நான் அதனைத் தவிர்க்க தினமும் பல்வேறு யுக்திகளை யோசிப்பேன் ,ஒருநாள் எங்கள் வீட்டு நெற்க்குதிருக்குள் இறங்கி ஒளிந்து கொண்டேன் ,அவர் வீட்டை விட்டுப் போகும் வரை வெளிவரவில்லை ,அவரும் என் தாத்தாவோடு பேசிவிட்டு சென்று விட்டார் ,அடுத்த நாள் எனக்கு உடல் முழுவதும் சிவந்து தடிப்பு வந்துவிட்டது ,பிறகு கொஞ்ச நாட்கள் அவர் வரவில்லை பின்னர் அம்மா சொன்னார் அவர் இறந்து விட்டார் என்று ,கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது என்று கூட சொல்லலாம் ,ஆனால் என்னை அறியாமல் இன்று வரை யாராவது அவர் போல் கருப்பாக உயரமாக பருமனாக என் எதிரில் வந்தால் பயப்படுவேன் ,அவர்கள் இருக்கும் பக்கம் போக மாட்டேன்,அவர்களோடு பேசக்கூட பயப்படுகிறேன் ....என் பயம் கண்டு என் பிள்ளைகள் சிரிப்பார்கள் ,ஆனாலும் என் கையை இருக்கப் பற்றிக் கொள்வார்கள் புரிந்துணர்வோடு........:) :). நீங்களும் உங்கள் பிள்ளைகளைப் புரிந்து கொள்ளுங்கள் ,கொஞ்சம் அவர்களது மனநிலைக்கு மதிப்பளியுங்கள் ......

Sunday 14 July 2013

எனக்குத் தெரிந்த பேச்சி...உண்மை சம்பவம் ..பெயரும் ஊரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது .... பேச்சி என்னிடம் வீட்டு வேலைக்கு என்று வரும் பொது வயது 15 இருக்கும்,தான் ஆபத்தில் இருப்பதாகவும் தனக்கு உதவும் படி என் தம்பியை கெஞ்சிக் கேட்டுக் கொண்டதால் அவன் திருச்சியில் இருந்த என் வீட்டுக்கு அழைத்து வந்தான் ,மிகவும் பரிதாபகரமாக இருந்தது அவள் தோற்றமும்,கதையும் .."அப்பாவும் அம்மாவும் வேற்று சாதியை சார்ந்தவர்கள் ,காதலித்து திருமணம் செய்து கொண்டுவேற்று ஊரில் வாழ்ந்து கொண்டு இருந்தவர்களை ,அந்த இரு சாதியினை சார்ந்தவர்களும் கண்டுபிடித்து வெட்டிப் போட்டு விட்டதால் பேச்சி அநாதை இல்லத்தில் விடப்பட்டாள் 1 வயதில்,அவளுக்கு 7 வயது ஆன போது,அந்த அநாதை இல்லத்திற்கு பரிசோதிக்க வரும் மருத்துவர் தன வீட்டில் வேலைக்கு ஆள் வேண்டும் என்று தன்னோடு இவளை அழைத்து சென்று வைத்துள்ளார் ,பிறகு அவரது முதல் பெண் திருமணம் ஆனவுடன் அவர் வீட்டில் வேலை செய்ய மதுரைக்கு அனுப்பி விட்டார்,அங்கோ மருமகன் அவர் மனைவி வீட்டில் இல்லாத நேரங்களில் பேச்சியை பாலியலுக்கு உட்படுத்த தொல்லை கொடுத்து இருக்கிறார் ,இதற்கும் அந்த மருமகன் மிக பிரபலமான ஒரு தமிழ் நாளிதளின் நிருபர் , இந்தப் பெண் அவர் குளிக்கும் போது வெளியிலிருந்து தாழ்பாள் போட்டு விட்டு அருகிலிருந்த டீ கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த என் தம்பியின் காலில் விழுந்து அழவும் ,உடனே அவன் அழைத்து வந்திருந்தான் ..என்ன ஒரு கொடுமை....அநாதை என்றவுடன் நாம் தான் எவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்கிறோம் ???என் வீட்டில் பேச்சி 3 வருடங்கள் சந்தோசமாக குடும்பத்தில் ஒருத்தியாக ,என் இரு பெண் பிள்ளைகளுக்கும் நல்ல ஒரு துணையாக இருந்தால்..நான் இங்கு வரும் வரை.... தற்போது பேச்சி திருமணம் முடிந்து 2 குழந்தைகளின் தாய் ,கோயம்புத்தூரில் வசித்து வருகிறாள்.....கடந்த வருடம் விடுமுறைக்கு இந்தியா சென்ற போது பேச்சி சொன்னது "தற்போது நான் ஒரு அநாதை விடுதியில் வேலை செய்கிறேன் அக்கா,அனாதைக்கு எப்போதும் அநாதை இல்லம் தான் அடைக்கலம் கொடுக்கும் போல அக்கா ,இங்கு வரும் போது நான் நிறைய சொந்தங்களோடு இருப்பதாக உணர்கிறேன் அக்கா "எனக்கு வெளியில் வேலை வேண்டாம் அக்கா....இதில் வரும் வருமானம் போதும் அக்கா.." மன நிறைவு என்பது மிக பெரிய கொடுப்பினை தானே???அவளது சந்தோஷத்தைக் கெடுக்க மனம் இல்லாமல் ,இங்கு வந்து சேர்ந்தேன்.....நான் மனம் முழுக்க குறைகளோடு ....

Saturday 13 July 2013

வாழ்க்கையில் எது தேவை ,முக்கியம் என்பது இன்று வரை புரியாமல் தான் எல்லோரும் வாழ்ந்து வருகிறோம் ,ஒரு கான்செர் நோயாளியின் இறுதி கால கட்டத்தை உடன் இருந்து பார்த்தோமானால் என்ன தேவை என்பது தெள்ளத் தெளிவாகப் புரிந்து விடும்,அனுபவ உண்மை,....எல்ல்லா உணவுப் பண்டங்களையும் அவர்களால்,பார்க்க மட்டுமே முடியும் ,ஆசைப் பட மட்டுமே முடியும் ஒரு கால கட்டத்தில் யாரையும் அறிந்து கொள்ள முடியாமல்,பேச முடியாமல் ,வெறும் வெற்றுப் பார்வை மட்டும் பார்த்தபடி மரணிப்பது என்பது மிகக் கொடுமை ,எதிரிக்கு கூட வரக் கூடாது என்று தான் எல்லோரும் நினைப்போம் ...எல்லோரையும் மன்னிப்போம் ,முடிந்த வரை நெருங்கி பழகி கஷ்டம் வளர்ப்பதை விட கொஞ்சம் தள்ளி நின்று என்றும் துணை இருப்போம் ...எல்லோரோடும் ...நம் வாழ் நாள் இறுதி வரை...இது தான் எனக்கு நான் செய்து கொண்ட உறுதி மொழி... ... ,

Wednesday 10 July 2013

எல்லா வர்ணங்களும் கலைந்த பின்பும் முழு வெள்ளையாய்க் காத்திருப்பது உன் -உன் கை விரல்கள் தொட்டு எழுதப் போகும் வண்ணத்திற்காக மட்டுமே .....

Tuesday 9 July 2013

-பட்டுப் புடவையை -ஸ்பரிசிக்கையில் கூடவே --என்றோ மரித்த அம்மாவின் வாசமும் ,நினைவும் காலம் மிகச் சிறந்த நண்பன் --அறிவிற்கு மிகக் கொடூரமான எதிரி --மனதிற்கு ..
எனக்கு ஒரு சந்தேகம் ,எதற்க்காக சிலர் வேண்டி வேண்டி நண்பர்கள் வட்டத்தில் சேர அழைப்பு விடுப்பார்கள்? பிறகு சிறிது காலம் கழித்து எனக்கு 1000 நண்பர்களுக்கு மேல் சேர்ந்து விட்டார்கள் ,அதனால் சிலரை அதாவது யார் எல்லாம் லைக் போடா வில்லையோ அவர்களை எல்லாம் நீக்கி விடப் போகிறேன் என்று அலட்டிக் கொள்வார்கள்?