Thursday 29 August 2013

இன்று எங்கள் ஊரில் "அர்ப்பண நாள் "...காலையிலிருந்து எல்லோரும் வானொலி,தொலைகாட்சி வழி பாட்டு விரும்பிக் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள்,அதிகம் அம்மாவுக்கும்,மனைவிக்கும்,தோழனுக்கோ,தோழிக்கோ கேட்பது குறைவு தான் ,நாம் தான் சுயநலப் பிம்பங்கள் ஆச்சே,அவர்கள் இருவர் மட்டும் தான் எப்போதும் நம் நினைவில் வருகிறார்கள்,நாம் ரொம்ப நல்லவங்க என்று வேறு காண்பிக்க வேண்டும் அது ரொம்ப முக்கியம்,....எனக்கு இந்த நாளில் என்றும் நினைவுக்கு வருபவர் எனது இனிய தோழி ,அப்போது நான் இந்த நாட்டுக்கு வந்து 2 வருடங்கள் இருக்கும் ,பள்ளியில் பிள்ளையை அழைத்து வரும் போது,பார்த்து பேசிக் கொள்வோம்,பிறகு அது மறக்க முடியாத குடும்ப பிணைப்பாக ஆனது ,அவருக்கு 1 ஆண்,1 பெண் என ரெண்டு பிள்ளைகள்,தோழி பல் மருத்துவரும் கூட,ஆனால் இங்கு அவர் வேலை பார்க்கவில்லை ,ஒரு நாள் திடீரென்று என் கைகளைப் பிடித்து அழுதபடி சொன்னார் "நாங்கள் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும் ,6மாதங்களுக்குள்  என்றார் "கேட்ட போது "நாங்கள் 2 வருடங்களுக்கு முன் ஒரு பிறந்த நாள் பார்ட்டி போயிருந்தோம் ,அப்போது எல்லோரோடும் புகைப் படங்கள் எடுத்துக் கொண்டோம்,அதில் இருந்த யாரோ ஒருவர் இந்த அரசால் சந்தேகப் படும் வட்டத்துக்குள் இருப்பதால் அன்று அங்கு வந்து இருந்த அனைவருக்கும் இது போல் ஒரு ஓலை வந்து உள்ளது என்றார் ,அந்த 6 மாதத்திற்குள் அவர் வீடு விற்று ,குறைத்த விலைக்கு ,கணவரோடும்,பிள்ளைகளோடும் கண்ணீரோடு போகும் போது என்னிடம் சொன்னது இப்போது நினைக்கும் போதும் எனக்கு கண்ணீர் துளிர்க்கும்,""நாங்கள் தமிழ் மொழி பேசுபவராய் பிறந்ததைத் தவிர வேறு பிழை ஏதும் செய்யவில்லை ""

Tuesday 27 August 2013

காதல் என்பதும் கல்யாணம் என்பதும் தற்போதைய காலகட்டத்தில் அதன் பொருளை மாற்றிக் கொண்டு விட்டன என்றுதான் சொல்ல வேண்டும்,ஒரு பண்ட மாற்று ,ஒரு வியாபாரம்,ஒரு பொழுதுபோக்கு,ஒரு சின்ன அட்ஜஸ்ட்மென்ட் ,வேலைக்காரிக்கு,வேலைக்காரனுக்கு பதில்,அந்த (தேவைக்கு),பணக்காரனோ,காரியோ ஆகிட ஒரு எளிய  வழிஇப்படி இன்னும் பல....எதற்கு காதல் செய்கிறோம் என்று தெரியாமல் ஒரு கூட்டம்,பின்னர் கல்யாணம் என்று வரும் போதுமட்டும் தான் இதுவரை கண்ணுக்கு தெரியாத அனைத்து குறைகளையும் கண்டுபிடிக்கும் ஒரு கூட்டம்,....இன்று எங்கள் ஊர் ஊடகத்தில் ஒரு பெண் சொல்லிய செய்தி இப்படி எல்லாம் யோசிக்க வைத்தது ,அந்த பெண்ணின் உறவுக்காரப் பெண் ஒரு பையனை விரும்பியதாகவும் இருவரும் கிட்டத்தட்ட 10 வருடங்கள் காதலித்து விட்டு பிறகு திருமணம் செய்து கொண்டு உள்ளனர் ,பெற்றோர்கள் ஆசீர்வாதத்துடன் ,ஆனால் திருமணம் முடிந்து 8 மாதத்தில் விவாகரத்து கோரி உள்ளனர்,தற்போது நீதி மன்றத்தில் வழக்கு உள்ளது,ஏன்,எதற்கு  என்று இருவரும் சொல்லவும் மறுக்கின்றனராம்....10 வருடங்கள் தெரியாத விஷயம் 8 மாதங்களில் குறையாக தெரிந்தது என்ன என்று இரு வீட்டார்களும் புலம்புகின்றனர் .....
WHEN YOU HOLD  ME AND SLEEP EVEN AFTER A GOOD LOVE MAKING ---IT  IS REAL LOVE
WHEN YOU STILL HOLD ME AFTER AWAKENING FROM SLEEP ---IT IS BEYOND LOVE .....என்பது தான் என் நினைவுக்கு வந்தது .....எத்தனை பேர் இதன் முழு அர்த்தம் புரிந்து இருக்கிறோம்?வாழ்கிறோம்?......
நண்பர்களைப் பற்றி படிப்பது ,பேசுவது ,நண்பர்களோடு இருப்பது எல்லோருக்கும் பிடித்த ஒன்று ,எத்தனை பேர் நண்பர்கள் மூலம் பாடம் கற்றுக் கொண்டுள்ளோம்??வாழ்க்கையில் மறக்க முடியாத பாடம்,கதைகளில் வருவது போல் நிஜத்திலும் நடந்த உண்மைப் பாடம்....
என்னோடு அலுவலகத்தில் ஒன்றாக வேலை பார்த்த இரு இணைபிரியாத தோழியர்கள் அவர்கள்,எப்போதும் ஒன்றாக இருப்பார்கள்,வேலை நேரம் கூட இருவருக்கும் ஒன்றாக வரும் படி வாங்கிக் கொள்வார்கள் ,சாப்பாட்டு நேரம்,ஓய்வு நேரம் ரெண்டு பேரையும் தனித்து பார்க்க முடியாது ,நிறைய பேசுவார்கள்,சிரிப்பார்கள்,அவர்களில் ஒருவர் என்னோடு பஸ்சில் வருபவர் ,அதிகம் பேசிக் கொள்ள மாட்டோம் என்றாலும் முறைத்துக் கொள்ளவும் மாட்டோம் காரணம் அவர் எங்களை விட சீனியர் என்பதும் தான் ,எனக்கு அந்த தோழிகள் இருவரையும் சேர்த்துப் பார்க்க பிடிக்கும்,இருவரும் வெவேறு இனம் ,மதம் அழகானவர்களும் கூட,ஆனால் ஒரு நாள் இரவு எங்கள் வீட்டுக் கதவு தட்டப் பட்டு ,கத்தல் கேட்கும்  வரைஎனக்குத் தெரியாது என்னோடு வரும் பெண்ணின் மற்றொரு முகம்,ஆம்,அந்த பெண் யாரோ ஒரு நபருடன் ஓடிப் போய் விட்டது  ,நான் பஸ்சில் அந்த பெண்ணோடு போவதால் எங்கள் வீட்டில் வந்து சத்தம் போட்ட்டனர் அந்த பெண்ணின் உறவினர்கள் ,எப்போதும் பாவம் ஓரிடம்,பழி ஓரிடம் தானே?ஒரு வழியாக அவர்கள் சென்றவுடன் அடுத்த நாள் காலை அலுவலகம் போன பின்பு தான் முழுக் கதையும் தெரிந்தது ,அவர் ஓடிப் போனது அந்த மற்றொரு தோழியின் காதலரோடு என்று ,தன தோழியின் காதலுக்கு தூது போன இவர் கொஞ்ச காலம் ஆனதும் அவரை கழற்றி விட்டு இவர் அவரை விரும்பி இருக்கிறார் ,பழகி இருக்கிறார் அந்த தோழிக்கு தெரியாமல் ஏனென்றால் அந்த நண்பி வீட்டில் அதிகம் கட்டுப்பாடு என்பதால் அவரால் அதிகம் வெளியில் செல்ல முடியாது ,பேச முடியாது இதை இவர் தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு விட்டார் ...இந்த தோழியை அலுவலகத்தில் பார்க்க மிகவும் கஷ்டமாக இருந்தது அவர் நிலை ...கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் வரை லீவில் இருந்தார் ...மறுபடி அவரைப் பார்க்கும் போது புரிந்தது ,உண்மை அன்பு அவரை எந்த அளவுக்கு கொண்டு போய் விட்டுள்ளது என்று??ஆனால் ஓடிப் போன பெண்ணோ ,சிறிது காலம் கழித்து அந்த நபருடன் இதே ஊருக்கு மாற்றல் வாங்கி வந்து தனிக் குடித்தனம் செய்து கொண்டு இருந்தார் ..சந்தோஷமாக.....எனக்கு அவரைப் பார்க்கும் போது இன்னும் சிரிக்க கூடத் தோன்றுவது இல்லை ..

Thursday 15 August 2013

இன்று இந்திய சுதந்திர தினம் ..சிலருடைய பதிவுகளைப் பார்க்கையில் மிகவும் வருத்தமாக இருக்கிறது ,கொலையும்,கொள்ளையும்,கேடு கெட்ட அரசியல்  வாதிகளும்,சட்டங்களும் ,ஊழல்களும் ,பசியும் பஞ்சமும் எந்த நாட்டில் இல்லை ?இன்றைய நிலைக்கு நாமும் தெரிந்தோ,தெரியாமலோ ஒரு விதத்தில் காரணம் என்பதை எல்லோரும் சுலபமாக மறந்து நாட்டின் மீது பழி சுமத்துவது எந்த வகையில் நியாயம்?நாடு என்பதே நாம் தானே ,அனைத்து இயற்கை வளங்களும் அழிவதும் நம் மனித இனத்தால் தானே?எனக்கு எப்போதும் நான் என்றும் ஒரு இந்தியன் என்கிற பெருமை இருக்கும் ,அந்த நாளில் எங்கள் வீட்டிலும் ,நான் நினைக்கிறேன் கண்டிப்பாக நம் அனைவர் வீடுகளில்ருந்தும் யாரவது ஒருவர் (நம் மூதாதையர்)இந்த சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்து இருந்திருப்பார் ,அதற்க்கு நாம் கொடுக்கும் மதிப்பு இது தானா?அந்த நாடு எனக்கு கல்வி கொடுத்தது ,எங்களை வளர்த்தது ,அந்த கல்வி,அந்த அனுபவம் தான் எங்களை இங்கு வாழ வைக்கிறது என்கிற நன்றி இப்போதும் உண்டு,ஒருசில நிகழ்வுகளை வைத்து நம் நாட்டை நாம் தாழ்வாக எண்ணலாமா?எல்லா துறைகளிலும் இன்று நம் இந்திய பிள்ளைகள் நன்கு செய்கின்றனர்,அனைத்து உலக  நாடுகளிலும் நம் இந்தியர்கள் மிகப் பெரிய பதவி வகிக்கின்றனர் ,இந்தியா இன்று மிகப் பெரிய அளவில்,மிக விரைவாக  முன்னேறிக் கொண்டு இருக்கும் ஒரு தவிர்க்க முடியாத சக்தி என்று உலக நாடுகள் ஒருவித கலக்கத்தோடு கைகோர்க்க முன்வருகின்றனர் ,இந்தியாவை உற்றுப்பார்க்க துவங்கி உள்ளனர் இது எப்படி சாத்தியம்?இது நம்மால் தானே?நம் இந்திய  மக்களால் தானே?இங்கு சீனர்கள் வியந்து கேட்பார்கள் "எப்படி இந்தியர்கள் கணினி,கணக்கு,மருத்துவம்,சட்டம் ,கலைகள் என அனைத்துத் துறைகளிலும் மிக நன்றாக செய்கிறார்கள் என்று?"இங்கும் மிக பெரிய பதவியில் இந்தியர்கள் இருப்பார்கள்,இருக்கிறார்கள்,அங்கிருந்து விட்டு இப்போது நான் இந்திய செல்லும் போதெல்லாம் வியந்து போவது உண்டு விமான நிலையம்,தொலைத் தொடர்பு,வாகனங்களின் வசதி,பெருக்கம்,ஆங்கிலப் புலமை,என்று ஒவ்வொரு விதத்திலும் மாற்றம் காண முடிகிறது,சுதந்திர தினத்தை நினைத்து பெருமைப் படவில்லை என்றாலும் சிறுமைப் படுத்தாமல் இருக்கலாம் தானே?இருப்போம்,..அட்லீஸ்ட் 100000 ஊழல்கள் இருந்தாலும் கண்டிப்பாக 10 நல்ல மனிதர்கள் ,உள்ளங்கள்,இன்றும் நம்மிடையே உண்டு அவர்களுக்காக .....வாழ்க பாரதம் .....

Tuesday 13 August 2013

புத்தர் எப்போதும்,இப்போதும் பிடித்தமானவர்,வியப்பிற்க்குரியவர்,அவரைப் பற்றி படித்த பிறகு அம்மாவிடம் அதிகம் கதைகள் அவரைப் பற்றிக் கேட்பேன்,அம்மா தமிழ் ஆசிரியை ,அதிக விஷய ஞானம் உள்ளவர் ,அதனால் அனுபவங்கள் வழி எப்போதும் எங்களுக்கு மனிதர்களைப் புரிய வைப்பார் ,எப்படி இந்த அமைதி?எப்படி இந்த தெளிவு?எப்படி இந்த விட்டு விலகுதல்?என்று எல்லா விதத்திலும் வியந்து போவது உண்டு புத்தரைப் பற்றி கேட்ட பொழுது ...புத்த பிக்குகளை கண்டால் தேடி ஒடிச் சென்று வணங்குவோம்,இங்கும் சில இந்து கோவில்களில் புத்தர் சிலைகள் உண்டு ,மத பேதம் இன்றி அனைவரும் பத்தி ஏற்றி வைத்து வணங்குவார்கள் ...இங்குள்ள சீனர்களில் அதிகம் பேர் புத்த மதம் தழுவியவர்கள் ...###புத்த பிக்குகள் கலவரத்தில் ஈடுபட்டனர்,புத்த பிக்குகள் கொன்றனர் என்றெல்லாம் கேட்கும் போது பரிதாபம் வருகிறது புத்தரை நினைத்து ,ரெண்டு நாட்களுக்கு முன் கேட்ட செய்தி இலங்கையில் புத்த பிக்குகள் இஸ்லாமியர்கள் அவர்கள் தங்கள் மசூதியில் பிரார்த்தனையில் ஈடு பட்டிருந்த போது அவர்களை துன்புறுத்தி கலவர்,வன்முறை என்று கேட்ட போது இதை விட நல்ல  படம் சொல்ல முடியாது சொல்ல வேண்டிய விஷயங்களை என்று தோன்றியது ......
இன்று நானும் என் பெண்ணும் வெளில் சென்று இருந்து இருந்தோம்,என் பெண் பஸ் தற்போது எங்கு வந்து கொண்டு இருக்கிறது ,எங்கள் நிறுத்தத்திற்கு எப்போது வரும் என்று தன்மொபைல் IRIS வழி செக் பண்ணியது ,வர சிறு நேரம் ஆகும் அதாவது ஒரு 10 டு 13 minutes என்றவுடன் ,உடனே OMG ...so  late ..why  this  sbs transit  services are  nowadys  poor ??என்று உடனே tweet செய்ய துவங்கி விட்டது??இதுதான் தற்போதைய பிள்ளைகள் ,அவர்கள் வளரும் சூழ்நிலை அப்படி அதனால் அவர்களை நாம் குறை கூற முடியாது ,எனக்கு என் கல்லூரி காலம் நினைவுக்கு வந்தது ,அப்போது காலையில் 8 மணிக்கு பஸ் பிடித்தால் தான் 9 மணிக்குள் collegekkul நுழைய முடியும் ,இல்லையென்றால் ஒருபெரிய கும்பல் சேர்ந்து மிகவும் கஷ்டமாக ஆகிவிடும்,மொத்தமாக மதுரையின் அனைத்து கல்லூரி பிள்ளைகளும் கோரிப்பாளையம் வந்துதான் மாறவேண்டும் ,அப்போதெல்லாம் இப்போது உள்ளது போல் ஆட்டோக்கள் கிடையாது,fatimacollege ,ldc ,meenakshicollege ,yaadhava ,mannarcollege ,lawcollege ,medical  college ,madurai  college ,என்று அனைத்து students +professors என்று ஒரு பெரிய திருவிழா போல் இருக்கும் அப்போது ,நீந்திப் போவதற்குள் ஒரு பெரிய சாதனையாக இருக்கும் எங்களுக்கு ,கல்லூரிக்குள் நுழையும் போது,எதோ ஒரு பெரிய போரில் வெற்றி பெற்று விட்டது போல்தான் போவோம்,(அவ்வளவு வேர்த்து,களைத்து)..எங்கள் பஸ் கண்டக்டர் வேறு ரொம்ப அடாவடி பண்ணுவார்,அவருக்கு பிடித்த பெண் எங்கள் ஸ்டாப்பில் நிற்க வில்லை என்றால் உடனே doublewhistle கொடுத்து விடுவார்,அவ்வளவுதான் பஸ் அங்கு நிற்காது ,complaint  கொடுப்போம் ,உடனே அடுத்த நாள் மட்டும் எவ்வளவு மெதுவாக ஒட்டிச் செல்ல முடியுமோ அவ்வளவு மெதுவாக ஒட்டிச் செல்வார்,இல்லையென்றால் வேண்டுமென்றே பஸ் நிறுத்தம் தள்ளி நிறுத்தி எங்கள் அனைவரையும் ஓடிவந்து ஏறும்படி செய்வார்,இந்த பிரச்சனையை சமாளிக்க அந்த பெண்ணை தாஜா செய்து வைத்துக் கொள்வோம்,அந்த அக்காவின் bagai நாங்கள் வாங்கி வைத்துக் கொள்வது ,அவங்க உட்கார வழி செய்வது,sweet  வாங்கி கொடுப்பது ,எப்போது லீவ் என்று கேட்டு வைத்துக் கொண்டு அன்று மட்டும் போகும் பஸ்சில் ஏறி திரும்ப அதே ரூட்டில் காலேஜ் போவது??வேறு வழி???என்ன ஒரு ஆறுதலான விஷயம் முன்பு இப்போது இருப்பது போல் விஷமிகள் இல்லை,எல்லோரும் கொஞ்சம் வீட்டுக்கு பயந்தும்,படிக்க வேண்டும் என்கிற ஒரு முனைப்போடும் இருந்தகாலம்,ஓரளவிற்கு எல்லோரும் உணமையான நட்போடு,ஒருவருக்கொருவர் உதவிக் கொண்ட காலம் ......##இப்போது எல்லோரும்  கொஞ்சம் பணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் அதனாலோ என்னவோ இருபாலாரும்  ஒருவித உள்நோக்கம் கொண்ட நட்போடு தான் பழகுகிறார்கள் ...பிள்ளைகளையும் குற்றம் சொல்ல முடியாது அவர்கள் இருக்கும் உலகம்,அவர்களை சுற்றி நடக்கும் விஷயம் அப்படி....மதம்,இனம்,மொழி ,ஊர்,சாதி என்று எல்லாவழிகளிலும் ஒருமிகைப் படுத்தல் தற்போதுள்ள இளையர்களிடம் திணிக்கப் படுகிறது ...அதன் விளைவு ..ஒரு நிலையற்ற மனம்,நிலையற்ற தன்மை,தவறு என்று தெரிந்தாலும் அதையும் எதோ ஒரு வகையில்  ஒப்பீடு செய்து கொண்டு அதன் வழி செல்கிறார்கள் ......##வினை விதைத்தால் வினை தானே அறுவடை செய்யவும் முடியும்??

Monday 12 August 2013

இன்று என் சீன நண்பரும் அவரது துணைவியாரையும் சந்திக்க நேர்ந்தது ,பேசிக் கொண்டே இருந்த போது விடுமுறை காலம் பற்றி பேச்சு வந்தது அவர்கள் இருவரும் எப்போதும் விடுமுறைக்கு இந்தியா செல்பவர்கள் ,அங்கு அவர்களுக்கு தாஜ்மஹால் மிகப் பிடித்த இடம் ,சில உணவு வகைகள் மிகப் பிடிக்கும் ,இம்முறை எங்கு என்றேன் ,சில நொடிகள் என்னைப் பார்த்து விட்டு சொன்னார் ,நாங்கள் இம்முறை இந்திய செல்வதற்காக என்று டிக்கெட் புக் பண்ணி வைத்ததை கான்செல் பண்ணி விட்டோம் ,அங்கு நடக்கும் rape cases என் மனைவியை மிகவும் பயமுறித்தி விட்டது ,இது போல் நாங்கள் மட்டுமல்ல எங்கள் குழுவில் உள்ள 10 பேரும் பதிவை கான்செல் பண்ணி விட்டு பதிலாக ஹாங்காங் போகிறோம் என்றார்,என் அங்கு இன்னும் அந்த நபரை தண்டிக்கவில்லை?குற்றம் இன்னும் அங்கு நிரூபிக்க படவில்லையா?என்றும் கேட்டார் ,இங்கெல்லாம் ஒரு நபர் குற்றவாளி என்று நிரூபிக்க பட்ட உடன் அவருக்குரிய தண்டனை நிறைவேற்றப் பட்டு விடும் ,அங்கு எதனால் ஒரு வருடம் கடந்தும் இன்னும் அவர்கள் தண்டிக்கப் படவில்லை??உண்மையில் எனக்கு இதற்க்கு என்ன பதில் சொல்வது என்று தெரிய வில்லை ,இது போல் சில நேரடிக் கேள்விகள் வரும் போது வெட்கத்தோடு தலை குனிவது அல்லது அமைதியாக இருப்பதைத் தவிர என்ன என்னால்/நம்மால் செய்து விட முடியும்????
நமக்குத் தெரியும் எய்தவன் எங்கோ இருக்க அம்பை நொந்து என்ன பயன்??அவர்களுக்கு விளக்கம் சொல்வதற்கு பதில் அமைதி காப்பது இந்த இடத்தில் புத்திசாலித்தனம் என்று எனக்குத் தோன்றியது .....

Friday 9 August 2013

இன்று சிங்கப்பூரின் 48வது தேசிய தினம் ,ஒரு மிக சாதாரணமான மீன் பிடி கிராமமாக இருந்த ஒரு சிறு கடுகின் அளவு பரப்பளவு கொண்ட நாடு ,தீவு இன்று உலக அளவில் போட்டித்தன்மை மிக்கதாய் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாய் அமெரிக்காவின் dollarskku ஈடு கொடுத்துக் கொண்டு இருப்பது எப்போதும் எனக்கு மலைப்பாக இருக்கும் ,ஒரு தனி மனிதனின் சாதனை ,உழைப்பு ,அசைக்க முடியாத நம்பிக்கையின் சின்னம் சிங்கபுரின்  தந்தை என்று அழைக்கப்படும் உயர் திரு லீ குவான் யு அவர்கள் ,இங்கு குற்றங்கள் குறைவு என்பதற்காக குற்றங்களே இல்லை என்று பொருள் படாது என்பது இந்த நாட்டின் தாரக மந்திரம் ,ஒரு தப்பு முளைக்கும் போதே ஒரு கை அல்ல ரெண்டு கை அல்ல 100 கைகள் கொண்டு கிள்ளி எறியப்படும் சட்டம் ,சமமான அளவு உரிமை ,திறமைக்கு முன்னுரிமை எங்கும் எதிலும் கடை பிடிக்கப்படும் ஒழுங்குமுறை ,மிக சரியான அளவு திட்டமிடுதல் செயல்படுத்துதல் இவையெல்லாம் காரணம் என்று சொல்லலாம் ,சிங்கப்பூரில் இருந்து பிழைக்க முடியாதவன் எங்கும் பிழைக்க முடியாது என்று நம்மவர்கள் வேடிக்கையாக சொல்வது உண்டு ,உண்மை உழைத்தால் ,படித்தால் கண்டிப்பாக முன்னேற முடியும் குடும்பத்தாரின் புரிந்துணர்வு மிக முக்கியம் இல்லையென்றால் குடும்ப வாழ்வு கொஞ்சம் சிரமம் என்று இங்குள்ள சில இளையர்கள் திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார்கள் ,அப்படியே திருமணம் செய்து கொண்டாலும் குழந்தை பெற்றுக் கொள்வதை விரும்புவதில்லை தற்போதைய சிங்கப்பூரின் பிரச்சனையும் அதுதான் அரசாங்கமும் அதற்க்கென நிறைய சலுகை திட்டங்களையும் அறிவித்து உள்ளார்கள் இங்கு அனைத்து ஆண் பிள்ளைகளும் ,2 வருடங்கள் தேசிய சேவை செய்ய வேண்டும் ,அது கட்டாயம் ,இந்தியாவிலும் அது போல் கொண்டு வந்தால் 10 பிள்ளைகள் கெட்டுப் போனாலும்2 பிள்ளையாவது உண்மையான நாட்டுப் பற்றோடு இருக்குமோ என்று எண்ணிக் கொள்வது உண்டு ...திரு லீ குவான் யு அவர்களின் மகன் திரு லீ சியாங் லூங் அவர்கள் தான் தற்போதைய பிரதமர் ,படிப்பிலும் திறமையிலும் ,முடிவு எடுப்பதிலும் ,மக்களோடு பழகுவதிலும் அப்பாவை விட அதிகமாய் பேசப்படுபவர் ,நேசிக்கப் படுபவர் ...குடும்ப அரசியல் என்று சொல்லப் பட்டாலும் சிறுதும் குறை காண முடியாத ,மக்களின் மீது உண்மையான அக்கறை கொண்ட அரசு என்றும் சொல்லலாம் ....

SINGAI NAADU (Official Music Video)

Thursday 8 August 2013

என் நெருங்கிய தோழி மிகவும் வருத்தப்பட்டார் தங்களை புலம் பெயந்தவர்கள் ,அகதிகள்  என்று மற்றவர்களால் அழைக்கப்படுகிறோம் என்று ,நான் யோசித்தேன் எங்களைப் போன்றவர்களுக்கு என்ன பெயர்??பிறந்தது ,வளர்ந்தது ,படித்தது ,மணம் செய்து கொண்டது அனைத்தும் ஒரு நாடு,வளர்சிக்காக (பணத்திற்காக) வந்தது ஒரு நாடு ,முதலில் நம் பிரிவுக்காக வருத்தபப்டும் உறவுகள் பின்னர் பணம் என்கிற விஷயத்திற்காக மட்டும் நம்மை நினைப்பார்கள்,நாம் இங்கு இருந்து கொண்டு அங்கு இருப்பவர்களை வளர்ப்போம் ,விடுமுறைக்கு சொந்த நாட்டிற்கு போவோம் எவ்வளவோ ஆசைகளை மனதில் சுமந்து ,அங்கோ நீங்கள் கொண்டு வரும் பொருள் பொறுத்து மதிக்கப் படுவீர்கள் ,எப்போதோ வந்து தங்கப் போகும் ஆசையில் நாங்கள் அங்கு அவர்கள் வசிக்க வீடுகள் வாங்குவோம்,சில சமயங்களில் வீட்டு பெயர்கள் கூட அவர்கள் பெயர்களில் பதிவு செய்து ஏமாந்து போனவர்கள் கதையும் உண்டு ,பிள்ளைகள் இந்த நாட்டில் படித்து வளர்வார்கள் ,ஒரு கால கட்டத்தில் அங்கு செல்லவே பிரியப் பட மாட்டார்கள் ,உறவுகள் தரும் ஏமாற்றம்,பிள்ளைகளின் வளர்சிக்காக  இங்கு நம்மை நிரந்தரமாக தங்க முடிவு எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ள வைத்து விடும் ,இங்கு பிறந்தவர்களோ நம்மை போட்டியாக நினைக்க துவங்கி விடுவார்கள் ஒரு கால கட்டத்தில் ,நம்மால் முழுவதும் மாற முடியாமல் ,அங்கு இருப்பவர்களை மறக்கவும் முடியாமல் ஒரு வாழ்க்கை இங்கு வந்து தங்கி விட்ட அனைவருக்கும் ..ஒருமுறை இந்த நாட்டின் பிரதமர் சொன்னார் ""இங்கு வந்து வீடுகளில் முதலீடு செய்து விட்டு வெளி நாடுகளில் வசிக்கும் அனைவரும் ,இந்த நாட்டின் காற்றைத்தான் வாங்கிக் கொண்டு செல்கிறார்கள் என்று தான் சொல்வேன் "என்றார் ,உண்மைதானே எங்கள் நிலையும் அது போலத் தான் என்பேன் நான் ,நீங்கள் போரின் காரணமாக உங்கள் நாட்டில் இருந்து வெளியேறியவர்கள் ,நாங்கள் விருப்பப் பட்டு வெளியேறி "திரிசங்கு சொர்க்கத்தில் வசிப்பவர்கள் "அதனால் யாரும் யாரையும் சொல்வதற்கு அருகதை அற்றவர்கள் பெண்ணே என்றேன்  ....
ரம்ஜான் என்றம் பிரியாணியோடு நினைவுக்கு வருபவர் புது ராவுத்தர் ,எங்கள் வீட்டிற்கு மிக அருகில் இருந்தவர்கள் ,மிகவும் எழைப்பட்டவர்கள் ,பாட்டி மட்டும் தான் ,பிள்ளைகள் 4,பாட்டி மிக அழகாக இருப்பார்,யாரும் அவர்கள் வீட்டிற்கு வர மாட்டார்கள் ,எப்போதும் பாட்டியும் எங்கள் வீட்டில் தான் இருப்பார்,உணவுப் பொருட்கள்,பணம் என்று அவருக்கு உதவவும்  யாரும் இல்லாமல் இருந்தார் ரம்ஜான் தீபாவளி என்று  அன்று பண்டிகைகளில் வித்தியாசம் தெரிந்தது இல்லை அம்மா ஒருமுறை சொன்னார் ""பாட்டி இஸ்லாமிய மதம் அவர் கணவர் வேறு மதம்,அவர் பெரிய பணக்காரர்,பாட்டியின் அழகில் மயங்கி இந்திய சுதந்திரம் அடைவதற்கு முன்பே குதிரையில் பாட்டியை தூக்கி சென்று மணம் செய்து கொண்டாராம் அவரும்பாட்டியின் மதம் மாறினார் ஆனால் யாரும் ,அவர்கள் திருமணத்தை அங்கீகரிக்கவில்லை ,மாறாக ஊரை விட்டே வெளியேற்றி விட்டனராம் ,அதனால் தான் அவர்கள் வீட்டிற்கு யாரும் வருவதில்லை ,அவர் கணவரின் அப்பாவும் தன அனைத்து சொத்துகளையும் தான தர்மத்திற்கு எழுதி வைத்து விட்டார் ,அதனால் தான் அவர் இறந்த பிறகு பாட்டி இவ்வளவு கஷ்டப் படுகிறார் என்றார்"பிள்ளைகள் படித்து வேலையில் அமர்ந்தவுடன் அவர்கள் மதத்தினர் பெண் கொடுத்தனர் அவரது பிள்ளைகளுக்கு ,இன்று அவரது பிள்ளைகள் நன்கு அறியப்படும் பணக்காரர்கள் ,ஆனால் பாட்டி மட்டும் கடைசி வரை வறுமையில் அங்கீகாரம் கிடைக்காமல் தான் மறைந்தார் ,பிள்ளைகளின் தொலை பேசிக்கு நாம் அழைத்தால் முதலில் அவர்கள் மத பிரார்த்தனை வரிகள் சொல்லி விட்டே பேச ஆரம்பிப்பார்கள் ....

Tuesday 6 August 2013

உறவுகள் --உறவுகளோடு வாழ்ந்து ,உறவுகளோடு கொண்டாடி ,உறவுகளுக்கிடையே மரித்துப் போக எல்லோருக்கும் ஆசைதான் ,எத்தனை பேருக்கு அது நிராசையாகப் போய்விடுகிறது என்பது புதிர் ....
நாம் ஒரு வேலைக்குப் பொய் சேரும் போது நம்மோடு வந்து சேரும் அனைவரும் நம்மோடு இணைந்து ஒரு நண்பர்கள் வட்டம் அமைந்து விடுவது உண்டு ,அது போல் தான் எனக்கும் ,எங்கள் வட்டத்தில் 5 பேர் உண்டு ,அதில் ஒருத்தி தான் சுகுணா என்று வைத்துக் கொள்வோம்,அழகாக இருப்பாள் ,நன்கு பட்டுப் பாடுவாள் ,கொஞ்சம் ஏழைக் குடும்பம் ஆனால் அது தெரியாவண்ணம் நேர்த்தியாக உடுத்தி வருவாள் ,ஒரு நாள் மிக சந்தோஷமாக அவளுக்கு திருமணம் என்றும் அதுவும் அவள் மாமா பையனுடன் என்றும் சொன்னாள்,திருமணம் இனிதாய் நடந்தது ,செலவு முழுக்க மாமா ஏற்றுக் கொண்டார் என்றாள்,எங்கள் அனைவருக்கும் மிகவும் மதிப்பு அவர் மாமா மேல் வந்தது ,மணம் முடித்த கையோடு அவள் கணவர் ஊருக்கு  மாற்றலாகிப் போனாள்,மிக மிக சந்தோஷமாக இருப்பதாக எங்களுக்கு கடிதம் எழுதினாள்,எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி எனெற்றால் எங்கள் வட்டத்தில் முதலில்  மணம் செய்து கொண்டவள் அவள் ஒருமாதம் முதல் 45 நாட்கள் கடந்தது ,திடீரென்று ஒரு நாள் அவள் கணவர் இறந்த செய்தி வந்தது ,அனைவரும் திகைத்துப் போனோம் ,அங்கு சென்ற போது அவள் கதறல் மிகவும் பரிதாபமாக இருந்தது ,அதை விட உண்மை தெரிந்த போது எங்கள் அலுவலகமே கொதித்துப் போனது ,அந்த மாமா மகன் ஒரு இருதைய நோய் உடையவர் ,அவருக்கு திருமணம் செய்யக் கூடாது என்று ஏற்க்கனவே மருத்துவர்கள் அவரது தாய் தந்தையிடம் சொல்லியும் அவர்கள் கேட்காமல் சொந்த தங்கையின் வறுமை நிலையைப் பயன்படுத்தி தந்தையின் மகளை மகனுக்கு மணம் முடித்து வைத்துள்ளனர் ,இது அவர் மகனுக்கே தெரியாது என்றும் சொன்னார்கள் ,மிக வேதனையாக  இருந்தது அவள்  நிலை ,யாரால் என்ன செய்துவிட முடியும்?ஒரே வாரத்தில் அவளுக்கு மறுபடியும் நாங்கள் இருந்த அவள் அம்மா ஊருக்கு மாற்றல் வாங்கினார்கள் ,ஒருமாத விடுப்பிற்கு பிறகு வேலைக்கு வந்தாள்,சொன்ன செய்தியோ அதிர்ச்சி ,தான் 25 நாட்கள் கர்ப்பம் ஆனால்  கலைக்க  மறுத்து விட்டாள்,அவளை மணம் முடிக்க எத்தனையோ பேர் வந்தும் மறுத்து விட்டாள் அவள் மகன் தற்போது ஒரு engineer ,ஒரு குழந்தைக்கு தகப்பன் ,இன்றும் அவளைப் பார்க்கையில் ஒரு சோகம் ,வருத்தம் மனதிற்குள் வரும் -----சொந்தங்கள் எப்படி எல்லாம் சுயநல வாதியாக இருக்கிறார்கள் ?அவர்களது சுயநலம் ஒரு ஏழைப் பெண்ணின் வாழ்வில் எப்படி விளையாடி விட்டது?45 நாட்கள் மட்டுமே வாழ்ந்த வாழ்க்கைக்கு அவள் வாழ் நாள் முழுக்க இன்றும் கூட வேலை செய்கிறாள்  ,கேட்டால் சொல்வாள் ""அவரை நான் முழு மனதாக நேசித்தேன் ,அவரும் உண்மையாக இருந்தார் அந்த கடைசி  நிமிடம் கூட என் மடி மீது என் கைபிடித்தபடி தான் அவர் உயிர் பிரிந்தது ,அவருக்கு தெரிந்து இருந்தால் இந்த மணம் நடக்க ஒத்துக் கொண்டு இருக்க மாட்டார் ,சாவின் இறுதி வரை அவருக்கு தெரியாது ,அப்படி இருக்க நான் ஏன் அவரை மறக்க வேண்டும்?   அவர் நினைவோடு சந்தோஷமாக இருக்கிறேன் என்பாள்"பெண்களின் மணம் பெண்களுக்கே புரியாத புதிர் தான் போல் இருக்கிறது ,அன்பு செலுத்தவும் ,அன்பால் வெல்லவும் அவளால் மட்டுமே முடியும் என்பது எங்கள் அனைவரின் கருத்தாக இருந்தது  அவளைப் பார்த்த பிறகு .....

Monday 5 August 2013

இங்கு கடந்த வாரம் நடந்த நிகழ்வு ----இங்குள்ள ஒரு உயர்நிலைப் பள்ளி (பெண்கள்) மாணவிகள் இருவர் பள்ளிக்கு மொட்டைத் தலையோடு வந்ததால் பள்ளி ஆசிரியர் அவர்களை வகுப்பிற்குள் அனுமதிக்க மறுத்து அலுவலக அறையில் இரண்டு வகுப்புகள் முடியும் வரை அமர வைத்து விட்டார் ,பின்பு பள்ளியின் பிற மாணவிகள் அனைவரும் சேர்ந்து பணம் போட்டு ,அவர்கள் இருவர்க்கும் விக் வாங்கித்தந்தனர் ,அதன் பிறகு அவர்கள் வகுப்பிற்கு சென்றனர் ...இதுதான் செய்தி  நடந்தது என்னவென்றால் கடந்த சனிக்கிழமை அன்று இங்குள்ள சில பள்ளி மாணவிகள் கான்செர் விழிப்புணர்வு இயக்கத்தில் கலந்து கொண்டு அவர்கள் தங்கள் தலை முடியை மழித்துக் கொண்டனர் ,இந்த பெண்கள் பள்ளி மாணவிகள் அந்த இயக்கத்தில் தாங்களாகவே கலந்து கொண்டு ஆசிரியரிடம் தலை முடியை மழித்துக் கொள்ள அனுமதி கேட்டுள்ளனர் ,ஆசிரியர் விக் வைத்துக் கொண்டு பள்ளிக்கு வருவதாக இருந்தால் செய்துகொள்ளலாம் என்று அனுமதி வழங்கி உள்ளார் ,எனெற்றால் அந்த பள்ளியில் அதற்க்கு (மொட்டைத் தலைக்கு) அனுமதி இல்லை ,இவர்களும் சம்மதித்துள்ளனர் ,5 மாணவிகள் தலை முடியை மழித்துக் கொண்டதில் இவர்கள் இருவர் மட்டும் விக் அணியாமல் பள்ளி வந்தது தான் பிரச்சனை ஆகி விட்டது ,மாணவிகள் விக் அணிந்தால் தலையில் அரிப்பு வந்து விடுகிறதுஎன்று சொல்கிறார்கள் ,அதற்க்கு ஆசிரியர் அப்படியென்றால் நீங்கள் மருத்துவரிடம் அதற்க்கான சான்றிதல் வாங்க வேண்டும் என்கிறார் ,பல தரப்பட்ட கருத்துகள் ,சிலர் இது ஒரு நல்ல விஷயம் தானே இதற்க்கு இவ்வளவு அலட்டிக் கொள்ள வேண்டுமா?என்கிறார்கள் ,சிலர் மாணவிகள் முதலில் சத்தியம் செய்து உள்ளனர் ஆசிரியரிடம் அதனைக் காப்பாற்ற வேண்டும் என்றும்,சிலர் பள்ளி மாணவிகள் இது போல் விஷயங்களில் பள்ளிப் படிப்பை முடித்த பின் செய்ய வேண்டும் என்றும்,இறுதியில் இங்குள்ள கல்வி அமைச்சு "மாணவிகள் அவர்கள் தம் பள்ளிக் கொள்கைகளையும் ,சட்ட திட்டங்களையும் மதித்து பின்பற்ற வேண்டும் "என்று அறிவுறுத்தி உள்ளது
 இன்று ஒரு மிக உண்மையான மனிதர்கள்,காதலர்கள் பற்றி சொல்லத் தோன்றுகிறது ,எனது உறவினரும் கூட,காதல்,அன்பு,அடர்த்தியான நேசம் எல்லாவற்றுக்கும் பெயர் இவர்கள் மட்டும் தான் என்று எனக்குத் தோன்றும் ,இன்று இருவரும் உயிரோடு இல்லை ...பெயர்களை   சொல்லி  இனம் காட்ட விரும்பவில்லை ....பெண் தாதி,ஆண் மருத்துவர் இருவரும் கல்லூரி படிப்பு முதல் காதல் செய்தனர் ,ஆண் பணக்காரர்,ஜாதி வேறு வேறு ,ஆணின் அம்மா சம்மதிக்கவில்லை ,ஆணுக்கு சிறுவயதிலேயே அப்பா தவறி விட்டார் ,அம்மா சம்மதிக்க மறுத்ததால் அவரைக் கஷ்டப் படுத்த இருவரும் விரும்பவில்லை ,பிரிந்தனர் ,அவர் அமெரிக்க சென்று விட்டார் ,பெண் chiristhava மதம் மாறி .தமிழ் நாட்டிலுள்ள ஒரு மலைப்பிரதேச சிற்றூரில் அங்குள்ள மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்தார் ,காலம் கடந்தது,பெண்ணுக்கு 38வது வயதில் கற்பபையில் கான்செர் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டு எடுத்து விட்டார்கள் ,40 வது வயதில் ஒரு நாள் அமெரிக்க சென்ற அந்த ஆண் திரும்ப வந்தார் அவர் அம்மா மறைவுக்கு ,பிறகு இந்த பெண் நண்பர்,காதலியைத் தேடிக் கண்டுபிடித்தார் ,திருமணம் செய்து  கொண்டார் ,அதோடு அவரும் அதே கிராமத்தில் அவரோடு மதம் மாறி அங்கு சேவை செய்தார் ,பெண் நபரின் தம்பி மகளை தத்து எடுத்து வளர்த்தனர் ,படிக்க வைத்தனர்,அவள் தற்போது அதே கிராமத்தில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை ,இரண்டு பெண்பிள்ளைகளின் அம்மா ,அவர்கள் இருவரும் அந்த பெண்ணிடம் சிறு வயது முதல் தாங்கள் வளர்ப்பு பெற்றோர் ,என்று உண்மை சொல்லித் தான் வளர்த்து வந்தனர் ...வளர்கிறோம் என்பதற்காக அவளிடம் அவர்கள் இருவரும் பொய் சொன்னதில்லை ,அவளுடைய மற்ற சகோதரிகளை விட இந்த பெண் மிக நன்றாக இருக்கிறாள் என்று தான் சொல்ல வேண்டும் .......கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தான் இருவரும் ஒருவர் பின் ஒருவராக அதிகம் கஷ்டப் படாமல் ,மரணம் அடைந்தனர் .....காதல் என்றாலே கெட்ட வார்த்தை என்கிற பின்னணியிலிருந்து வந்த எனக்கு இவர்களைப் பார்க்கும் போது தான் அது ஒரு உண்மையான விஷயம் ,அது அனைவருக்கும் சாத்தியமும் இல்லை என்று எண்ணம் தோன்றியது .....

Friday 2 August 2013

மேகங்கள் கடந்து போவது போல் நாட்களும் மனிதர்களும் நம்மைக் கடந்து செல்கின்றனர் ,நாமும் கடந்து வருகிறோம் என்றாலும் சிலர், சிலர் மட்டும் காலங்கள் கடந்தும் தம் நினைவை நம்மிடம் பதிவு செய்து விடுவது உண்டு ,அப்படி ஒருவர் என் ஒவ்வொரு பயணத்திலும் என்னை நினைக்க வைத்தவர் ,வைத்துக் கொண்டும் இருப்பவர் நன்றியோடு ..
குற்றங்கள் இங்கும் உண்டு ,அதற்க்கான தண்டனையும் உடனடியாக உண்டுவயது ,இனம் நாடு என்று  எந்தவித பாரபட்சம் இல்லாமல் ..இது நான் சிங்கப்பூரில் கண்ட உண்மை ..குற்றம் நிரூபிக்கபட்ட உடன் தண்டனை நிறைவேறும் பிறகு முழு செய்தியும் வெளியில் வரும் ,வந்த முதல் ஆண்டே ஒரு மரண தண்டனை நிறைவேற்றப் பட்ட செய்தி கேட்டு
கொஞ்சம் ஆடித் தான் போனேன் ...
நானும் என் பிள்ளைகளும் மட்டும் திருச்சியிலிருந்து சிங்கப்பூர் ...வரும் நாள் இது நடந்து ஒரு 10 ஆண்டுகள் ஆகி விட்டது ,நான் எப்போதும் பயணத்தின் போது குறிப்பிடப்பட்டிருக்கும் அளவிற்கு உள்ளாகவே luggage
எடுத்துச் செல்வீது உண்டு இங்கு அனைத்துப் பொருட்களும் கிடைப்பதால் வீணாக தூக்கிக் கொண்டு வருவதை தவிர்த்து விடுவேன் ,அப்படித்தான் அன்றும் checkin பண்ணுவதற்கு நின்று கொண்டு இருந்தபோது ஒரு பெண்மணி நடுத்தர வயது என்னிடம் வந்து தானும் சிங்கப்பூர் வருவதாகவும் தன luggageil ஒரு mixie மட்டும் நான் என் luggageodu போட்டு விடுகிறேன் என்று கொஞ்சம் கெஞ்சினார் சரி ஒரே ஊர்ர்க்காரர் என்று சொல்லி என்னை சம்மதிக்க வைத்து விட்டு என் luggageodu வைத்து விட்டார் ,என் முறை வரும் போது என்னை உள்ளிருந்து ஒரு உயர் அதிகாரி அழைப்பதாகச் சொன்னார்கள் ,போனேன் கொஞ்சம் பயம் கலந்த ஆச்சரியம் என்னவோ எதோ என்று தான் அவர் ""அம்மா ,நீங்கள் என் மகள் போல் இருப்பதால் சொல்கிறேன் இந்த luggage எடுக்க வேண்டாம் உங்களுக்கு தெரியாது இதில் என்ன இருக்கிறது என்று இல்லையா?அவர் சொன்னதை வைத்து நீங்கள் ஒத்துக் கொள்ள வேண்டாம் ,எங்கு எப்போது யார் எதைக் கடத்துவார்கள் என்று கண்டு பிடிப்பதும் ,நம்புவதும் கஷ்டம் ,அவர் mixiein உள்ளே ஏதாவது வைத்து இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்??நீங்கள் செல்வதோ சிங்கப்பூர் ,மிகக் கடுமையான சட்டம் உள்ள நாடு யார் வந்து சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் ,உங்களைப் பார்த்தல் நீங்கள் தப்பு செய்யமாட்டீர்கள் ..என்று இந்தியாவில்நம்புவார்கள் ,ஆனால் அங்கு எந்த ஒரு நாட்டு வேண்டுதலும் எடுபடாது "என்று சொல்லி என்னோடு வந்து அந்த பெண்ணின் luggageai மட்டும் எடுத்து அவரே முடியாது என்று சொல்லி அந்த பெண்ணிடம் திருப்பிக் கொடுத்து விட்டார் ...இன்று கூட ஒரு செய்தி நேற்று மலேசியா ஆடவர் இருவர் அவர்களது வாகனத்தில் அளவுக்கு அதிகமாக போதைப் பொருள் வைத்து singaporekkul கடத்த  இருந்ததாக இங்கு கைது .குற்றம் நிருபிக்கப் பட்டால் மரண தண்டனை என்றார்கள் இன்றும் அவரை ,அந்த உயர் அதிகாரியை நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன் ....####நல்ல உள்ளங்களும் ,மனிதர்களும் எங்கும் உண்டு நம் கண்களில் படுவது குறைவு அவ்வளவுதான் ....

Thursday 1 August 2013

இன்று தாதியர் தினம் ...எனக்கு எப்போதும் நினைவுக்கு வருபவர் பூக்கார பொன்னம்மா,கிட்டத்தட்ட 8 வருடங்கள் பழக்கம் ,திருச்சி மாவட்டம் பக்கம் ஒரு கிராமம்  சொந்த ஊர் ,தினமும் இரவு 8 மணிக்கு எங்கள் வீட்டிற்கு பூ கொண்டு வருவார் ,ஒரு நாள் மிகவும் கோபம் அடைந்து இனிமேல் பூ வேண்டாம் என்று சொன்ன போது ,தன் நிலை சொல்லத் துவங்கினார் """எனக்கு தம்பியை மாப்பிள்ளை என்று சொல்லி  விட்டு ,படுத்த படுக்கையில் கிடந்த அண்ணனின் கையையைப் பிடித்து என் கழுத்தில் தாலி கட்டினார்கள் ,பின்பு தான் தெரிந்தது ,அண்ணன் பிறவியிலேயே மூளை வளர்ச்சி இல்லாதவர்,நடமாட முடியாதவர்,பேச முடியாதவர் என்பது ,இவர் இப்படி இருந்தால் தம்பியை யாரும் மணமுடிக்க வரமாட்டார்கள் என்பதால் ஏழையான என்னை என் அப்பா வாங்கி இருந்த கடனுக்காக இவருக்கு இல்லை இதுக்கு கட்டி வைத்து விட்டாரகள் வந்த அன்றே எனக்கும் இவருக்கும் ஒரு தனி ரூம் வீட்டுக்கு ஒதுக்குப் புறத்தில் கொடுத்துள்ளார்கள் நான் இவர்கள் வயக்காட்டில் வேலை செய்தால் தான் எனக்கு சாப்பாடு மற்ற என் செலவுகளையெல்லாம் நான் தான் சம்பாதித்துக்கொள்ள வேண்டும் நான் இருக்கும் உடல் நிலையில் என்னால் வேறு எந்த வேலையும் செய்ய முடியாது அதனால் தான் பூ விற்கிறேன் முதலில் அழுதேன் இந்த என் புருஷனை அடித்தேன் பிறகு எனக்கு மிகவும் பாவமாக இருந்தது இந்த ஆளைப் பார்க்க அடித்தாலும் அழுகாது அனால் கண்களில் இருந்து கண்ணீரா கொட்டும் பசித்தாலும் கேட்கத் தெரியாது நாமாக பார்த்து சாப்பாடு ஊட்ட வேண்டும்,குளிக்க வைத்து மலம்,சிறுநீர் எடுப்பது முதல் நான் தான் செய்ய வேண்டும் ,இவர் அம்மா சொந்த அம்மா தான் ஆனாலும் இந்த பக்கம் கூட வந்து எட்டிப் பார்க்கமாட்டார்கள் யாரோ ஜோசியக்காரன் சொன்னதால் இவரை கொல்லாமல்விட்டு விட்டார்களாம் முதலில் எனக்கு எங்காவது ஓடி போய் விடலாம் ,என்று தோன்றியது ,இல்லை சில சமயம் செத்துப்  போய் விடலாம் என்று தோன்றியது பிறகு இந்த ஆளை நினைக்கும் போது மிகவும் பரிதாபமாக இருக்கும் என் தலை விதி இப்படி இருக்கும் போது இந்த ஜீவனை என்ன சொல்ல முடியும்?எனக்கு வருடம் செல்ல செல்ல இவர் மேல் பாசம் வந்து விட்டது ,அவருக்கு என்னை அடையாளம் தெரிகிறது நான் வேலைக்கு போய் விட்டு வந்தால் வாய் லேசா சிரிக்கும் ,அந்த கண்ணில் பாசம் தெரியும் ,இவங்க வீட்டில் நான் இல்லாத போது இவர் மலம்,சிறுநீர் போய் அப்படியே கிடப்பதைப் பார்த்தால் இவரை அடிப்பார்கள் ,திரும்ப நான் போகும் போது அது சின்ன பிள்ளை போல எதோ அழுதுகிட்டே சொல்லறது மாதிரி செய்யும் அக்கா,அப்படியே என் மனசு உருகிப் போய் விடும் ,அதனால் தான் 3 மணி நேரத்துக்கு ஒரு தடவை ஓடிப் போய் அதைப் பார்த்து விட்டு சாப்பாடு தண்ணி குடுத்து விட்டு துடைத்து விட்டு விட்டு வருவேன் அக்கா அதுனால தான் இப்படி லேட்டா வருகிறேன் என்றார் ..
கேட்ட எனக்கு,எங்களுக்கு  மனம் ஆடிப் போய் விட்டது "
படிக்காத இந்த கிராமத்து மனுஷிக்குத் தான் எவ்வளவு பரந்த மனது ,தாலி கட்டி விட்ட ஒரே காரணத்திற்க்காக ஒரு காய்கறி நிலையில் இருக்கும் மனிதன் மேல் எவ்வளவு பாசம் ,பெற்ற தாயும் உடன் பிறந்த சொந்தங்களும் கூட கை விட்டு விட்ட நிலையில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இவர் செய்யும் சேவை எனக்கு அவரை கை எடுத்துக் கும்பிடலாம் போல்தோன்றியது ,தெய்வம் மனித ரூபத்தில் வரும் என்று படித்திருக்கிறேன் ,அன்று பார்த்தேன் ..பொன்னம்மா வடிவில் ....###காசு ,பணம் ,நகை சொத்து ,அழகு ,பதவி என்று வெறி பிடித்து அலையும் மனிதர்கள் மத்தியிலும் இது போல் சிலர் வாழ்வதால் தான் உலக உருண்டை கடலுக்குள் மூழ்கி விடாமல் இருக்கிறது என்று எப்போதும் நினைத்துக் கொள்வேன் ......