Friday, 19 July 2013

சிங்கப்பூருக்கு குடும்பத்தோடு குடி பெயர்ந்து கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகி விட்டது ,இதுவரை இப்படி ஒரு சம்பவம் இங்கு நடந்தது இல்லை ,பட்டப் பகலில் எல்லோர் முன்னிலையிலும் அப்பா ,மகன் என இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர் ,அப்பா தொழில் அதிபர் ,மகன் அரசாங்க வேலையில் இருப்பவர் ,வயது 42,சந்தேகத்தின் அடிப்படையில் பக்கத்து நாட்டுக்கு தப்பிச் சென்ற கொலையாளியை (?)இரண்டு நாட்களுக்குள் கைது செய்து விட்டார்கள் ,கொலை செய்யப் பட்டவர்களும் ,பிடிபட்டவரும் வேறு வேறு இன,மதத்தைச் சேர்ந்தவர்கள் ,பிடிபட்டுள்ளவர் மிகப் பெரிய நிலையிலுள்ள ஒரு காவல் அதிகாரி ,போன மாதம் அந்த கொலையுண்ட தொழில் அதிபரின் தொழிற்சாலையில் நடந்த ஒரு திருட்டு சம்பவத்தை கையாண்ட காவல் அதிகாரி இவர் என்பதைத் தவிர இவர்களுக்குள் எந்த வித தொடர்பும் இல்லை ..ஏன் ,எதற்கு?என்கிற காரணம் தெரிய என்னோடு சேர்ந்து அனைவரும் ஆவலாக உள்ளனர் ,அமைதி காக்கின்றனர் ,இங்கு யாரும் இதனை தன் சுய லாபத்திற்காக
மக்களைதூண்டி விட்டு அந்த நெருப்பில் குளிர் காய வில்லை ,பொதுச் சொத்துக்கள் நாசமாகவில்லை,வேலை நிறுத்தம் இல்லை,அடுத்த இனத்தை வெட்டி சாய்க்க கிளம்பவில்லை "இன்று நான் உழைத்தால் ,நாளை என் பிள்ளைகள் உழைக்கும்,ஒற்றுமை காக்கும் என்கிற நல்ல எண்ணமும் ,உண்மை கண்டிப்பாக வெல்லும் என்கிற நம்பிக்கை ,கண்டிப்பாக அரசாங்கம்
உரிய.நடவடிக்கை எடுக்கும்" என்றும் சொல்லி அடுத்த வேலையைப் பார்க்க கிளம்புகின்றனர்....

No comments:

Post a Comment