Tuesday, 16 July 2013

இந்த பதிவு கொஞ்சம் சிரிக்கவும் ,சற்று சிந்திக்கவும், செயற்படுத்தவும் மட்டுமே -- யாரையும் பழி சொல்வதோ ,குறிப்பிட்டோ சொல்லவில்லை ,எல்லோருக்கும் குழந்தைகள் உண்டு அவர்களிடம் இது போல் சொல்ல வேண்டாம் என்று ஒரூ சின்னவேண்டுதலோடு.ஏனென்றால் இது நான் .--- என் அப்பாவின் அப்பா (தாத்தா)விவசாயி,விஷகடி மருத்துவர் ,கோவில் பூசாரி அவரைப் பார்க்க எப்போதும் ஆட்கள் வீட்டுக்கு வந்த வண்ணம் இருப்பார்கள் ,அப்போது எனக்கு வயது 7,ஒரு பெரியவர் மிக கருப்பாய் மிக உயரமாய் ,மிக பருமனாய் பெரிய மீசை வைத்திருப்பார் ,அவர் கண்கள் எப்போதும் சிவப்பாக இருக்கும் ,வாயில் எப்போதும் வெற்றிலையும் ,புகையிலையும் போட்டு மென்று கொண்டே இருப்பார் ,அவர் என் தாத்தாவைப் பார்க்க அடிக்கடி வருவார் ,வரும் போதெல்லாம் என் கைபிடித்து இழுத்து தன பக்கம் வைத்து கொள்வார் ,நான் விடுபட திணறும் போது"உன்னை நான் தான் கல்யாணம் செய்துகொள்ளப் போகிறேன் நாளைக்கு வந்து தூக்கிப் போய் விடப் போகிறேன் ,அப்போ என்ன செய்வாய்?"என்று கேட்டு சிரிப்பார் ,வீட்டில் எல்லோரும் நான் அப்போது அழுவதைப் பார்த்து சிரிப்பார்கள் ,என் அம்மா அப்படி எல்லாம் இல்லைடா,சும்மா விளையாட்டு என்று சொன்னாலும் நான் சமாதானம் அடைந்து விடுவதில்லை ,மிகவும் பயப் படுவேன் வீட்டில் நுழைந்தவுடன் அந்த தாத்தா என்னைத்தேடி வந்து விளையாட்டாக பயமுறுத்த ஆரம்பிப்பார் ,நான் அதனைத் தவிர்க்க தினமும் பல்வேறு யுக்திகளை யோசிப்பேன் ,ஒருநாள் எங்கள் வீட்டு நெற்க்குதிருக்குள் இறங்கி ஒளிந்து கொண்டேன் ,அவர் வீட்டை விட்டுப் போகும் வரை வெளிவரவில்லை ,அவரும் என் தாத்தாவோடு பேசிவிட்டு சென்று விட்டார் ,அடுத்த நாள் எனக்கு உடல் முழுவதும் சிவந்து தடிப்பு வந்துவிட்டது ,பிறகு கொஞ்ச நாட்கள் அவர் வரவில்லை பின்னர் அம்மா சொன்னார் அவர் இறந்து விட்டார் என்று ,கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது என்று கூட சொல்லலாம் ,ஆனால் என்னை அறியாமல் இன்று வரை யாராவது அவர் போல் கருப்பாக உயரமாக பருமனாக என் எதிரில் வந்தால் பயப்படுவேன் ,அவர்கள் இருக்கும் பக்கம் போக மாட்டேன்,அவர்களோடு பேசக்கூட பயப்படுகிறேன் ....என் பயம் கண்டு என் பிள்ளைகள் சிரிப்பார்கள் ,ஆனாலும் என் கையை இருக்கப் பற்றிக் கொள்வார்கள் புரிந்துணர்வோடு........:) :). நீங்களும் உங்கள் பிள்ளைகளைப் புரிந்து கொள்ளுங்கள் ,கொஞ்சம் அவர்களது மனநிலைக்கு மதிப்பளியுங்கள் ......

1 comment: