நேற்று ஒரு இனிய மறக்க முடியாத நிகழ்வு ..எனக்குத் தெரிந்த ஒரு தோழியைப் பார்க்க இங்குள்ள முதியோர் இல்லம் சென்று இருந்தேன்,அங்கு இருந்த ஒரு சீனப் பாட்டி என்னை அருகில் வருமாறு அழைத்தார் "எனக்கு
உன் தலை அலங்காரம் பிடித்துள்ளது ,எனக்கும் அது போல் செய்து விடுகிறாயா?என்றார் "சரி என்று பின்னல் போட்டு அதை மேல்நோக்கி கொண்டை போல் போட்டு விட்டேன் ,கண்ணாடியில் தன்னைப் பார்த்து விட்டு அந்தப் பாட்டிக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை ,எனக்கு நன்றாக இருக்கிறதா என்று என்னிடம் மட்டுமல்ல ,அங்கு இருந்த சக நண்பிகளிடம் கேட்டு விட்டு ,என்னிடம் நீ இங்கு எத்தனை மணி வரை இருப்பாய் என்று கேட்டார் ,சொன்னேன் ,"நான் ஏன் உன்னை எனக்கு தலை அலங்காரம் செய்ய சொன்னேன் தெரியுமா?என்நண்பன் என்னைப் பார்க்க ஆஸ்திரேலியாவிலிருந்து வருகிறான் ,அவன் வரும் போது,நான் அழகாக இருக்க வேண்டாமா?அதனால் தான்
என்றார் வெட்கத்தோடு ...பிறகு ஒரு 1 மணி நேரம் ஆகி இருக்கும் நான் வேறு ஒரு இடத்தில் என் தோழியோடு ,அதே இல்லத்தில் தான் இருந்த போது ,என் தோழியின் பெயரோடு என்னையும் சேர்த்து வரச் சொல்லி ஒலிபெருக்கியில் அழைத்தார்கள் ,போனேன் அங்கு அந்தப் பாட்டி அவர் நண்பரிடம் என்னை அறிமுகம் செய்து விட்டு சொல்கிறார் "என்னை அழகாக்கியவள் "அதோடு அவரும் அந்த நண்பரோடும் என்னோடும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் "நான் உனக்கு நன்றி சொல்ல மாட்டேன் ,நீ உனக்கு எப்போவெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போது என்னைப் பார்க்க வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் ,சம்மதித்தேன் "மனம் முழுக்க நிறைவோடு ....:)
###உலகம் அழகாகத் தோன்றுவது கண்டிப்பாக அழகான மனம் கொண்ட மனிதர்களோடு வாழும் போது தான் என்று புரிகிறது .....
வீட்டில் ஒரு சிறு மனஸ்தாபம் ,சிலரைப் பிடிக்காமல் போகும் போது வேண்டுமென்றே முகம் கூட கழுவாமல் எதிர்கொள்பவர்கள் ,மிகச் சிறிய தலை வலியை கூட பெரியதாக்கி பிரதாபிப்பவர்கள் மத்தியில் தான் மிக சிறிது காலம் தான் வாழப் போகிறோம் என்று தெரிந்தும் அந்தசிறு வயது முதல் பழகிய நண்பர் முன் இந்தப் பாட்டி தன்னை அழகாக காட்டிக் கொள்ள வேண்டும் என்று முனைப்பெடுத்துக் கொண்டது என்னை மிகவும் யோசிக்கவும் ,கற்றுக் கொள்ளவும் வைத்தது .......
,

No comments:
Post a Comment