சமீபத்தில் மிகவும் பரபரப்பாக தமிழகத்தில் பேசப்பட்ட ,பாதித்த ஒரு நிகழ்வு -----
நான் சாதி,மதம்,இனம் ,காதலுக்கு எதிரி என்கிற நிலையில் இதை பகிரவில்லை ,என் கண்ணோட்டம் அந்த இரு பிள்ளைகளின் பெற்றோர் பற்றியதே ..எது காதல்?புரியாமல் புரிந்தார் போலும்,தெரியாமல் தெரிந்தார் போலும் நடந்து கொள்வதா?என்ன காரணம்?தற்போது வெளியிடப்படும் ஒரு சில கேவலமான சினிமாக் காட்சிகளா?தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் கூட தற்போது நேரடியாகவே சில நடனக் காட்சிகளில் அதிக நெருக்கம் காண்பிப்பதா?எதில் இல்லை ஆபாசம்?இவை தான் காரணம் என்றால் இன்னும் எவ்வளவு காலம் அவர்களை மட்டும் குறை சொல்லி காலம் தள்ளுவார்கள்?ஏன்?தற்போதுள்ள பிள்ளைகள் எல்லோரும் நன்கு படிக்கிறார்கள் ,அதிகம் தெரிந்து கொள்கிறார்கள் அப்படி இருக்க இந்த விஷயத்தில் மட்டும் ஏன் இந்த அளவு அறியாமை?தற்கொலையும் ஆசிட் வீச்சும் எதற்கு தீர்வு?அந்த பையன் செய்தது தற்கொலையா?கொலையா?என்பது வேறு விஷயம் ,ஆனால் அந்த பையன் இறந்து போனதன் மூலம் ஒரு பெண்ணை உயிரோடு சாகடித்து விட்டு சென்று இருக்கிறான் என்று தான் சொல்ல முடியும் ,மனதில் அவன் மேல் முழு நம்பிக்கை இருந்ததால் முதலில் வீட்டை விட்டு வந்த பெண்ணிற்கு ,அதே நம்பிக்கை அந்த பையனிடம் மறுபடி கொண்டு வந்து சேர்க்கும் என்பதை அவன் எப்படி மறந்தான்?அப்படி என்றால் அவனுக்கு அவன் அன்பின் மேல் நம்பிக்கை இல்லை என்று தானே அர்த்தம் ,தந்தையின் மறைவு அந்த பெண்ணை மிக பாதித்துள்ளது என்பதை கண்கூடாகப் பார்த்தும்,உணர்ந்தும் இருந்த அந்த பையனுக்கு தானும் அதே போல் ஒரு தண்டனை அந்த பெண்ணுக்கு கொடுக்கிறோம் என்பது மறந்து போனது ஏனோ?இதுவும் ஒரு வகையில் ஒரு கொடூரப் பழி வாங்கல் என்று தான் சொல்ல முடிகிறது ....அவர்கள் இருவரது பெற்றோர் நிலை கண்டிப்பாக யாராலும் தேற்றி விட முடியாதிருக்கும் ,ஒரு பிள்ளை பெற்றது முதல் ஒவ்வொரு நிலையிலும் எவ்வளவு கனவு,ஆசை,எதிர்பார்ப்பு பெற்றவர்களிடம் ..பிள்ளைகள் உடல் நலமில்லாமல் மறைந்து விட்டால் கூட கொஞ்ச நாளில் தேற்றிக் கொள்ளும் தாயின் மனம் இது போன்ற நிகழ்வுகளினால் வந்த இழப்பை எப்படி மறப்பது?மன்னிப்பது?பள்ளி பருவத்தில் காதலித்து பெற்றோர் எதிர்ப்பால் திருமணம் மறுத்து வெளிநாடு சென்று விட்டு அதே பெண்ணை அவளது 40வது வயதில் ,கான்செர் காரணமாக கர்ப்பப்பை நீக்கிய பின்பும் இந்திய வந்து மணந்து கொண்ட ஒரு ஆண் மகனை எனக்குத தெரியும்,கட்டிய மனைவி ஒரு மகனைப் பெற்றபின் பிரிந்து சென்று 7 வருடங்கள் கடந்தும் அந்த மனைவிக்காக காத்திருந்து மகனை வளர்த்த ஒரு இள வயது ஆடவனையும் தெரியும் ,இந்த வருடம் அந்த மனைவி அவள் கணவனோடும் குழந்தையோடும் வந்து சேர்ந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறாள் ...இவர்கள் செய்தது ,காத்திருந்தது எந்த நம்பிக்கையில்?இதன் பெயர் காதல் இல்லையா?
எனக்கு திருமணம் ஆகும் முன் காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து கொண்டு இருந்த 2 வெவ்வேறு தம்பதிகள் சொன்ன அட்வைஸ் "'மறந்தும் காதல் திருமணம் மட்டும் செய்து கொள்ளாதே ,பெற்றோர்களைப் பகைத்து விட்டு ""

No comments:
Post a Comment