Sunday, 14 July 2013
எனக்குத் தெரிந்த பேச்சி...உண்மை சம்பவம் ..பெயரும் ஊரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது ....
பேச்சி என்னிடம் வீட்டு வேலைக்கு என்று வரும் பொது வயது 15 இருக்கும்,தான் ஆபத்தில் இருப்பதாகவும் தனக்கு உதவும் படி என் தம்பியை கெஞ்சிக் கேட்டுக் கொண்டதால் அவன் திருச்சியில் இருந்த என் வீட்டுக்கு அழைத்து வந்தான் ,மிகவும் பரிதாபகரமாக இருந்தது அவள் தோற்றமும்,கதையும் .."அப்பாவும் அம்மாவும் வேற்று சாதியை சார்ந்தவர்கள் ,காதலித்து திருமணம் செய்து கொண்டுவேற்று ஊரில் வாழ்ந்து கொண்டு இருந்தவர்களை ,அந்த இரு சாதியினை சார்ந்தவர்களும் கண்டுபிடித்து வெட்டிப் போட்டு விட்டதால் பேச்சி அநாதை இல்லத்தில் விடப்பட்டாள் 1 வயதில்,அவளுக்கு 7 வயது ஆன போது,அந்த அநாதை இல்லத்திற்கு பரிசோதிக்க வரும் மருத்துவர் தன வீட்டில் வேலைக்கு ஆள் வேண்டும் என்று தன்னோடு இவளை அழைத்து சென்று வைத்துள்ளார் ,பிறகு அவரது முதல் பெண் திருமணம் ஆனவுடன் அவர் வீட்டில் வேலை செய்ய மதுரைக்கு அனுப்பி விட்டார்,அங்கோ மருமகன் அவர் மனைவி வீட்டில் இல்லாத நேரங்களில் பேச்சியை பாலியலுக்கு உட்படுத்த தொல்லை கொடுத்து இருக்கிறார் ,இதற்கும் அந்த மருமகன் மிக பிரபலமான ஒரு தமிழ் நாளிதளின் நிருபர் , இந்தப் பெண் அவர் குளிக்கும் போது வெளியிலிருந்து தாழ்பாள் போட்டு விட்டு அருகிலிருந்த டீ கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த என் தம்பியின் காலில் விழுந்து அழவும் ,உடனே அவன் அழைத்து வந்திருந்தான் ..என்ன ஒரு கொடுமை....அநாதை என்றவுடன் நாம் தான் எவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்கிறோம் ???என் வீட்டில் பேச்சி 3 வருடங்கள் சந்தோசமாக குடும்பத்தில் ஒருத்தியாக ,என் இரு பெண் பிள்ளைகளுக்கும் நல்ல ஒரு துணையாக
இருந்தால்..நான் இங்கு வரும் வரை....
தற்போது பேச்சி திருமணம் முடிந்து 2 குழந்தைகளின் தாய் ,கோயம்புத்தூரில் வசித்து வருகிறாள்.....கடந்த வருடம் விடுமுறைக்கு இந்தியா சென்ற போது பேச்சி சொன்னது "தற்போது நான் ஒரு அநாதை விடுதியில் வேலை செய்கிறேன் அக்கா,அனாதைக்கு எப்போதும் அநாதை இல்லம் தான் அடைக்கலம் கொடுக்கும் போல அக்கா ,இங்கு வரும் போது நான் நிறைய சொந்தங்களோடு இருப்பதாக உணர்கிறேன் அக்கா "எனக்கு வெளியில் வேலை வேண்டாம் அக்கா....இதில் வரும் வருமானம் போதும் அக்கா.."
மன நிறைவு என்பது மிக பெரிய கொடுப்பினை தானே???அவளது சந்தோஷத்தைக் கெடுக்க மனம் இல்லாமல் ,இங்கு வந்து சேர்ந்தேன்.....நான் மனம் முழுக்க குறைகளோடு ....
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment