Monday 2 September 2013

இங்கு வந்த முதல் ஆண்டிலேயே இரண்டு மரண தண்டனை செய்திகள் வெளி வந்தது ,இங்கு எப்போதும் தண்டனை நிறைவேற்றிய உடன் தான் செய்தி வெளியிடுவார்கள் ,1.போதைப் பொருள் கடத்தல் 2.கற்பழிப்பு ,அந்த ரெண்டாம் செய்தி தான் கொஞ்சம் மனம் கலக்கம் கொடுத்தது ஏனென்றால் அவர் தமிழ் மொழி பேசும் தமிழகம் சார்ந்தவர் ,இங்கு வேலைக்கு வந்தவர் ,மனைவியும்,குழந்தையும் உண்டு ,மதுரையை சேர்ந்தவர் ,குடி போதையில் அவருக்கு மது பரிமாறி அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஒரு சீன பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதால் நிருபிக்கப் பட்ட குற்றம் உடனே தண்டனை ,அப்போதைய முதல்வர் கருணாநிதி அவர்கள் கூட சொல்லி இருந்தார் "நம் நாட்டிலிருந்து வெளிஊருகளுக்கு பிழைக்க செல்பவர்கள் தயவு செய்து அந்த நாட்டின் சட்ட திட்டங்களை மனதில் கொண்டு ,மதித்து நடக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" ,ஒரு விலை மதிப்பற்ற உயிர் அநியாமாக பறி போய் விட்டது ,அவர் இங்கு வந்த கடன் கூட அடைய வில்லை என்றும் பிறகு செய்தி வெளி வந்தது ...அதே போல் போதைப் பொருள் கடத்தலும் உடனுக்குடன் தண்டிக்கப் படுவார்கள்
தற்போது இங்கு சட்டம் கொஞ்சம் திருத்தி அமைக்கப் பட்டு உள்ளது ,முன்பு கொலைக் குற்றம் சாட்டப்பட்டு நிருபணம் ஆகி விட்டால் உடனே மரண தண்டனை ,இப்போது அதன் பின்னணியை ஆராய்ந்து பிறகு அதற்க்கு ஏற்ப தண்டனை வழங்கப் படும் என்று மாற்றம் கண்டு உள்ளது ,போன வாரம் இந்தியாவைச் சேர்ந்த ஒரு கொலைக் குற்றவாளி இந்த புதிய சட்டத் திருத்தம் காரணமாய் மரண தண்டனையிலிருந்து தப்பித்தார் ,தற்போது அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப் பட்டுள்ளது ....கொஞ்சம் ஆறுதலான செய்தியும் கூட ......

No comments:

Post a Comment