Sunday 8 September 2013

எனக்கு கொஞ்சம் நெருக்கமான ஊடகத்  துறையில் பணிபுரிந்து கொண்டு இருக்கும் தோழி பகிர்ந்து கொண்டது போன வாரம் காலை நான் சாலையைக் கடக்க முற்பட்ட போது ஒரு பாட்டியும் என்னோடு வந்தார் ,அவரை அவரது முதியோர் இல்லத்தில் விட்டு விட்டு வரும் போது அவர் சொன்னது "எனக்கு 8 பிள்ளைகள்,எல்லோரும்வேலைசெய்கிறார்கள்,அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது,பேரக் குழந்தைகளும் உண்டு,என்ன காரணமோ?இங்கு வந்து என்னை சேர்த்து விட்ட நாள் முதல் யாரும் என்னைப் பார்க்க வரவில்லை,இங்குள்ள சூழ்நிலை தெரியும்,வேலைப் பளு என்று எனக்கு ஒரு உதவி செய் ,தயவு செய்து யாராவது ஒருவரை எனக்கு போனிலாவது அழைத்து பேசும்படி சொல் பெண்ணே என்று சொல்லி தன் பெயர் சொன்னார்"அவருக்கு பிள்ளைகள் பெயர்கள் மட்டும் தான் தெரிகிறது அவர்கள் வேலை பார்க்கும்  இடமோ,,தொலை பேசி எண்ணோ தெரியவில்லை  மிகவும் பரிதாபமாக இருந்தது பிறகு நான் அந்த இல்லத்தின் தொலை பேசி எண்களை வாங்கி வைத்துக் கொண்டேன்,பாட்டி நான் உங்களோடு பேசுகிறேன்,என்னால் முடிந்த போது வந்து பார்க்கிறேன் என்று சொல்லி வந்தேன் என்றாள்,"நாம் தான் எவ்வளவு கொடூரமாக மாறி வருகிறோம் ,பணத்திற்காக வீட்டை பெற்றோருக்கு தெரியாமல் விற்று விட்டு ,அவர்களை கொஞ்ச நாள் இங்கு இருங்கள் என்று சொல்லி ஏமாற்றி முதியோர் இல்லத்தில் விட்டு விட்டு நாட்டை விட்டு சென்று விடுவதும், உள்ளூரில் இருந்து கொண்டு தங்கிப் பற்றி தவறான தகவல்களைக் கொடுப்பது என்று புலம்பித் தீர்த்து விட்டாள்,"எனக்கும் கூட ஒரு அனுபவம் உண்டு மதுரையில் இருந்து சென்னை செல்லும் வழியில் ரயிலில் செல்ல நேர்ந்த போது,திருச்சியில் அந்த 50 களில் இருந்த அந்த பெண்ணைப் பார்த்தோம்,ஒவ்வொரு பெட்டியாக ஏறி யாரையோ தேடுவது போல் தேடினார்,,கையில் கரும்பு வைத்து இருந்தார்,சிலரை அடிக்கவும் செய்தார்,மிகவும் பயமாக இருந்தது ஒரு போலீஸ் பின்னால் வந்து எங்களைக் காப்பாற்றினார்,அவரிடம் கேட்ட போது அவர் சொன்னது "இப்போது இது போல் நிறைய மனிதர்கள் உண்டும்மா,இங்கு சுற்றுப் பயணம் வருபவர்கள் இது போல் மன நிலை சரியில்லாதவர்களை ,வயதானர்களை,பராமரிக்க முடியாமல் வேண்டுமென்றே இது போல் மொழி தெரியாத இடத்தில் விட்டு விட்டு சென்று விடும் போக்கு அதிகரித்து வருகிறது "என்றார் .....

No comments:

Post a Comment