Monday 2 September 2013

சமீப  காலமாக அதிகம் இணையம்  வழி பரவி வரும் ஒரு திடுக்கிடும் தகவல் ,காந்திஜி,மகாத்மா ,இந்தியாவின் தேசத்தந்தை ,அகிம்சைக்கு வித்திட்டவர் ,உலகம் எங்கும் இவருக்கு சிலைகள் உண்டு,இவரைப் பின்பற்றி இன்றும் வாழ்ந்து வரும் தலைவர்கள் உண்டு ,இவரைப் பற்றி இவர் சிறப்பைப் பற்றி எழுதாத அரசியல் தலைவர்கள் இல்லை ,உலகின் வரலாற்றில் இடம் பிடித்துள்ளவர் .இவருக்கு தான் இந்த கதி,மிகவும் கேவலமான செய்திகள் அவரைப் பற்றிய அவதூறான செய்திகள் பரப்புவதில் யாருக்கு நன்மை கிடைக்கப் போகிறது?அது உண்மைய?பொய்யா?என்று கூடத் தெரியாமல் மலிவான செய்திகள் வெளியிடுவதில் என்ன அப்படி ஒரு சந்தோசம்?இங்கு மட்டும் அப்படி  ஒரு செய்தி ஒரு தலைவர் பற்றி வெளி வந்து இருந்தால் இந்நேரம் அவர்கள் சிறையில் ,ஆனால் இந்தியா ஏன் இது போல் அவதூறு இணைய பரப்புதல்களை நிறுத்த முடிவதில்லை?
சமீபத்தில் ஒரு தோழி கூட பதிவு செய்து இருந்தார் ,அவரோடு வேலை செய்யும் ஒரு ஆண் நண்பர் (இவருக்கு பிடிக்காதவர்) அவரோடு வேலை செய்யும் மற்றொரு  ஆண் நண்பரின் மனைவியோடு கள்ளத் தொடர்பு வைத்து இருக்கிறார் ,அந்த நண்பர் பாவம் தெரிந்தும் தெரியாதது போல் இருந்து விடுகிறார் என்று ,எப்படி??அடுத்தவர் சொந்த விஷயங்களில் தலையிடவும் தவறான செய்தி பரப்பவும் இவருக்கு என்ன உரிமை இருக்கிறது?இவர் யார் அதைப் பற்றி விமர்சிக்க?இவ்வாறு செய்வதால் இவர் தரம் தான் மற்றவர்கள் முன் தாழ்ந்து போகிறது என்று நினையாமல் எழுதி உள்ளார் ,இவர் பதிவிற்கு ஆவலோடு விமர்சனம் கொடுத்த நண்பர்கள் ஒரு கால கட்டத்தில் இவரைப் பற்றி அவர்கள் பதிவில் வெளியிட எவ்வளவு நாள் ஆகும்?அப்போது இவருக்கு எப்படி இருக்கும்?தற்போதைய கால கட்டத்தில் ஆண்களால் பெண்களுக்கு வரும் தொல்லைகளைக் காட்டிலும் பெண்களால் வரும் தொல்லைகள் தான் அதிகமாகி வருகிறது .......
நான் அந்த தோழியை அடுத்தவரின் சொந்த வாழ்க்கை பற்றி அவதூறு பரப்பிய தோழியை நட்பின் வட்டத்திலிருந்து நீக்கி விட்டேன் அவரிடம் என் ஒத்துக் கொள்ள முடியாத மனத் தாங்களை சொல்லி விட்டே .....

No comments:

Post a Comment