Sunday 8 September 2013

கணபதி என்னும் களிரினைப் போற்றின்
கவலைகள் நீங்கும் ,காமம் தொலையும்
விநாயகன் என்னும் வீரனை வணங்கின்
வினைகள் தீரும்,வெற்றிகள் விளையும்
ஐய்ங்கான் என்னும் ஐயனை நினைக்கின்
அல்லல்கள் தவிரும் ,அன்பே மலரும்
பிள்ளையார் என்னும் பெயரினை வணங்கின்
பெருமைகள் சேரும்  ,பிணிகள் அகலும்
விநாயகனைத் துதித்துடுவோம்
சகல சௌபாக்கியங்களையும் பெற்றிடுவோம்
குழந்தை முதல் இன்று வரை அனைவருக்கும் (இந்து மதம் தழுவிவர்கள்)சொல்லிக் கொடுக்கப்படும் பட்டிருக்கும் முதல் கடவுள் துதி,அன்று இனம் ,மதம் பாராது அனைவரும் ஒன்று சேர்ந்து மிக ஆர்வமாக களிமண் சேகரித்து,எருக்கம் பூக்கள் சேகரித்து,அருகம் புல் பிடுங்கி என்று மிக ஒற்றுமையாக போட்டி போட்டுக் கொண்டு யார் வீட்டில் மிக அழகிய பிள்ளையார் செய்கிறார்கள்,எவ்வளவு காசு நெற்றி மேல் வைக்கிறார்கள் 5ம் நாள் கழித்து எந்த குளத்தில் போட வேண்டும் .என்றெல்லாம் ஜாதி ,மத பேதம் இன்றி யோசிப்போம்,கொண்டாடுவோம்,எல்லோர் வீடுகளுக்கும்கொழுக்கட்டையும்,பொரியும்,பாயசம்,அவல்,மோதகம் கொடுப்பதில் எங்களுக்குள் மிகப்  பெரிய போட்டி நடக்கும்,,லீவு வேறா கேட்கவே வேண்டாம் பாட்டிகள்,தாத்தாக்கள் அன்று எல்லோருக்கும் பிள்ளையார் பற்றி கதைகள் சொல்வார்கள்,சில வீடுகளில் புதுத் துணிகள் கூட எடுப்பார்கள் கதைகள் கேட்க வரும் குழந்தைகளுக்கு கொடுக்க என்று,மிக அருமையான உண்மையான பிள்ளையார் சதுர்த்தி அப்போது கொண்டாடப் பட்டது ...கண்டிப்பாக பிள்ளையாரும் மிக சந்தோஷமாக இருந்திருப்பார் அன்று எங்களைப் பார்த்து ....இன்று எப்படி இப்படிஎல்லாம் யோசிக்க முடிகிறது,வர்ணம் பூச முடிகிறது?இனம் பிரிக்க முடிகிறது?ஒவ்வொரு தெரு வாரியாக ஒவ்வொரு உயரத்தில்,நிறத்தில் வடிவத்தில் அனைத்தையும் பார்க்கையில் பக்தி போய் நெஞ்சில் ..பயம் வருகிறது,போன 4 வருடங்களுக்கு முன் இந்த பண்டிகை அன்று நான் அங்கு இருந்த போதுஎங்கும் ஒருவித இறுக்கம்,அதீத பயம் கலந்த பக்தி நிலவுவது போல் தோன்றியது பிற மதம் சார்ந்த எங்கள் நண்பர்கள் யாரும் அந்த ஊர்வலம் முடிகின்ற  வரையில் வெளியல் வரவில்லை எங்களை சந்திக்க ...எங்களால்  உங்களுக்கு
தொந்தரவு வேண்டாம் தொலைபேசியில் பேசினால் போதும் என்று இருந்துவிட்டார்கள் ,அப்போதைய கிராமத்து பள்ளியில்படிக்கும் போது நடுவில் என்னோடு சேர்ந்த ஒரு பெண் தன் குடும்பம் மும்பை கலவரத்தால் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தப்பித்து ஓடி வந்துசேர்ந்த போது இந்த பக்கம் பரவாயில்லை என்று நாங்கள் கொஞ்சம் சந்தோஷப்பட்டுக் கொண்டோம்..இன்றோ/???//
எந்தக் கடவுள் இவர்களிடம் சொன்னது இப்படிக் கொண்டாடவென்று?அந்த கடவுள் தான் சொல்ல வேண்டும் இன்றைய தன் பெயரால் நடக்கும் கலவரங்களை,மிகைப்படுத்துதலை நிறுத்த வேண்டி  ..நடக்குமா???உயிரோடு இருக்கும் வரை வேண்டிக் கொள்வோம்........ ...

No comments:

Post a Comment