Wednesday 4 September 2013

சென்னை விமான நிலையம் ,இரவு 11.50,ரெண்டு மாதங்களுக்கு முன்பு நடந்தது ,ஒரு கணவன்,மனைவி,ரெண்டு குழந்தைகள் (1 ஆண்,1 பெண் )வயது இருவருக்கும் 9,7 இருக்கும் ,அனைத்து நுழைவாயில் பரிசோதனைகளும் முடித்து வந்தவுடன் பேசி,ஆடி,ஓடித் திரிந்து கொண்டிருந்தனர் இரு பிள்ளைகளும் ,முகத்தில்  அவ்வளவு சந்தோசம் ,முதல் முறையாக விமானப் பயணம் ,இருவரும் கேள்வி மேல் கேள்வி கேட்டு அவர்கள் அம்மாவைத் துளைத்துக் கொண்டிருந்தனர்,அம்மா முகத்தில் சந்தோசம் ஒருவித படபடப்பு இருந்தது ,முதல் முறை விமானப் பயணம் அப்பட்டமாக அந்த நால்வர் முகத்தில் தெரிந்தது ,கணவர் கொஞ்ச நேரம் காண வில்லை பிறகு வந்தார் வந்ததில் இருந்து கொஞ்சம் தள்ளாட்டம் ,நேரம் கடந்தது ஒருவழியாக நாங்கள் செல்லும் விமானத்திற்கு அழைக்கப் பட்டோம்,எல்லோரும் வரிசையில் நிற்கும் போது குழந்தைகள் உள்ளவர்கள் முதலில் வர அழைக்கப் பட்டார்கள்,இந்த குழந்தைகள் இருவரும் வேகமாக ஒடிச் சென்றனர் வரிசையில் ,அங்கும் சிறிது நேரம் ஆனது,உடனே அந்த அப்பா அங்கு இருந்த நபர்களிடம் கத்த ஆரம்பித்து விட்டார்,கத்தல் மிகப் பெரிதாகி அவர் தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமலே தன்னிலை  மறந்து போய் தன் உடைகளை கழற்ற  ,போலீஸ் வரவழைக்கப் பட்டு,அவரை அமைதிப் படுத்த அப்போதும் அவர் போலீசாரோடு சத்தம் போட்டு அந்த இடத்தில் சிறுது நேரம் கலவரம் ஆகி பிறகு அவர்கள் நால்வர் மட்டும் அன்று விமானம் ஏற அனுமதிக்கப் படவில்லை போலீசார் அவர்களை அழைத்து சென்று விட்டார்கள் ,அந்த பிள்ளைகள் இருவரும் ,அவரது மனைவியையும் பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது ,அந்த பிள்ளைகளின் கண்களின் கண்ணீரும்,ஏக்கமும் ஒரு அடிபட்ட அவமான உணர்வும் இப்போதும் என்னால் மறக்க முடிவதில்லை .....நேற்று தமிழ்நாடு அரசாங்கம் இனிமேல் அனைத்து பெரிய மால்களிலும் மதுக் கடை கொண்டு வர தீர்மானித்துள்ளது ..எப்படி எல்லாம் குடும்பங்கள் பாதிக்கப் படப் போகிறது என்பது கேள்வி குறி//?

No comments:

Post a Comment