Thursday, 8 August 2013

ரம்ஜான் என்றம் பிரியாணியோடு நினைவுக்கு வருபவர் புது ராவுத்தர் ,எங்கள் வீட்டிற்கு மிக அருகில் இருந்தவர்கள் ,மிகவும் எழைப்பட்டவர்கள் ,பாட்டி மட்டும் தான் ,பிள்ளைகள் 4,பாட்டி மிக அழகாக இருப்பார்,யாரும் அவர்கள் வீட்டிற்கு வர மாட்டார்கள் ,எப்போதும் பாட்டியும் எங்கள் வீட்டில் தான் இருப்பார்,உணவுப் பொருட்கள்,பணம் என்று அவருக்கு உதவவும்  யாரும் இல்லாமல் இருந்தார் ரம்ஜான் தீபாவளி என்று  அன்று பண்டிகைகளில் வித்தியாசம் தெரிந்தது இல்லை அம்மா ஒருமுறை சொன்னார் ""பாட்டி இஸ்லாமிய மதம் அவர் கணவர் வேறு மதம்,அவர் பெரிய பணக்காரர்,பாட்டியின் அழகில் மயங்கி இந்திய சுதந்திரம் அடைவதற்கு முன்பே குதிரையில் பாட்டியை தூக்கி சென்று மணம் செய்து கொண்டாராம் அவரும்பாட்டியின் மதம் மாறினார் ஆனால் யாரும் ,அவர்கள் திருமணத்தை அங்கீகரிக்கவில்லை ,மாறாக ஊரை விட்டே வெளியேற்றி விட்டனராம் ,அதனால் தான் அவர்கள் வீட்டிற்கு யாரும் வருவதில்லை ,அவர் கணவரின் அப்பாவும் தன அனைத்து சொத்துகளையும் தான தர்மத்திற்கு எழுதி வைத்து விட்டார் ,அதனால் தான் அவர் இறந்த பிறகு பாட்டி இவ்வளவு கஷ்டப் படுகிறார் என்றார்"பிள்ளைகள் படித்து வேலையில் அமர்ந்தவுடன் அவர்கள் மதத்தினர் பெண் கொடுத்தனர் அவரது பிள்ளைகளுக்கு ,இன்று அவரது பிள்ளைகள் நன்கு அறியப்படும் பணக்காரர்கள் ,ஆனால் பாட்டி மட்டும் கடைசி வரை வறுமையில் அங்கீகாரம் கிடைக்காமல் தான் மறைந்தார் ,பிள்ளைகளின் தொலை பேசிக்கு நாம் அழைத்தால் முதலில் அவர்கள் மத பிரார்த்தனை வரிகள் சொல்லி விட்டே பேச ஆரம்பிப்பார்கள் ....

No comments:

Post a Comment