Tuesday, 6 August 2013

உறவுகள் --உறவுகளோடு வாழ்ந்து ,உறவுகளோடு கொண்டாடி ,உறவுகளுக்கிடையே மரித்துப் போக எல்லோருக்கும் ஆசைதான் ,எத்தனை பேருக்கு அது நிராசையாகப் போய்விடுகிறது என்பது புதிர் ....
நாம் ஒரு வேலைக்குப் பொய் சேரும் போது நம்மோடு வந்து சேரும் அனைவரும் நம்மோடு இணைந்து ஒரு நண்பர்கள் வட்டம் அமைந்து விடுவது உண்டு ,அது போல் தான் எனக்கும் ,எங்கள் வட்டத்தில் 5 பேர் உண்டு ,அதில் ஒருத்தி தான் சுகுணா என்று வைத்துக் கொள்வோம்,அழகாக இருப்பாள் ,நன்கு பட்டுப் பாடுவாள் ,கொஞ்சம் ஏழைக் குடும்பம் ஆனால் அது தெரியாவண்ணம் நேர்த்தியாக உடுத்தி வருவாள் ,ஒரு நாள் மிக சந்தோஷமாக அவளுக்கு திருமணம் என்றும் அதுவும் அவள் மாமா பையனுடன் என்றும் சொன்னாள்,திருமணம் இனிதாய் நடந்தது ,செலவு முழுக்க மாமா ஏற்றுக் கொண்டார் என்றாள்,எங்கள் அனைவருக்கும் மிகவும் மதிப்பு அவர் மாமா மேல் வந்தது ,மணம் முடித்த கையோடு அவள் கணவர் ஊருக்கு  மாற்றலாகிப் போனாள்,மிக மிக சந்தோஷமாக இருப்பதாக எங்களுக்கு கடிதம் எழுதினாள்,எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி எனெற்றால் எங்கள் வட்டத்தில் முதலில்  மணம் செய்து கொண்டவள் அவள் ஒருமாதம் முதல் 45 நாட்கள் கடந்தது ,திடீரென்று ஒரு நாள் அவள் கணவர் இறந்த செய்தி வந்தது ,அனைவரும் திகைத்துப் போனோம் ,அங்கு சென்ற போது அவள் கதறல் மிகவும் பரிதாபமாக இருந்தது ,அதை விட உண்மை தெரிந்த போது எங்கள் அலுவலகமே கொதித்துப் போனது ,அந்த மாமா மகன் ஒரு இருதைய நோய் உடையவர் ,அவருக்கு திருமணம் செய்யக் கூடாது என்று ஏற்க்கனவே மருத்துவர்கள் அவரது தாய் தந்தையிடம் சொல்லியும் அவர்கள் கேட்காமல் சொந்த தங்கையின் வறுமை நிலையைப் பயன்படுத்தி தந்தையின் மகளை மகனுக்கு மணம் முடித்து வைத்துள்ளனர் ,இது அவர் மகனுக்கே தெரியாது என்றும் சொன்னார்கள் ,மிக வேதனையாக  இருந்தது அவள்  நிலை ,யாரால் என்ன செய்துவிட முடியும்?ஒரே வாரத்தில் அவளுக்கு மறுபடியும் நாங்கள் இருந்த அவள் அம்மா ஊருக்கு மாற்றல் வாங்கினார்கள் ,ஒருமாத விடுப்பிற்கு பிறகு வேலைக்கு வந்தாள்,சொன்ன செய்தியோ அதிர்ச்சி ,தான் 25 நாட்கள் கர்ப்பம் ஆனால்  கலைக்க  மறுத்து விட்டாள்,அவளை மணம் முடிக்க எத்தனையோ பேர் வந்தும் மறுத்து விட்டாள் அவள் மகன் தற்போது ஒரு engineer ,ஒரு குழந்தைக்கு தகப்பன் ,இன்றும் அவளைப் பார்க்கையில் ஒரு சோகம் ,வருத்தம் மனதிற்குள் வரும் -----சொந்தங்கள் எப்படி எல்லாம் சுயநல வாதியாக இருக்கிறார்கள் ?அவர்களது சுயநலம் ஒரு ஏழைப் பெண்ணின் வாழ்வில் எப்படி விளையாடி விட்டது?45 நாட்கள் மட்டுமே வாழ்ந்த வாழ்க்கைக்கு அவள் வாழ் நாள் முழுக்க இன்றும் கூட வேலை செய்கிறாள்  ,கேட்டால் சொல்வாள் ""அவரை நான் முழு மனதாக நேசித்தேன் ,அவரும் உண்மையாக இருந்தார் அந்த கடைசி  நிமிடம் கூட என் மடி மீது என் கைபிடித்தபடி தான் அவர் உயிர் பிரிந்தது ,அவருக்கு தெரிந்து இருந்தால் இந்த மணம் நடக்க ஒத்துக் கொண்டு இருக்க மாட்டார் ,சாவின் இறுதி வரை அவருக்கு தெரியாது ,அப்படி இருக்க நான் ஏன் அவரை மறக்க வேண்டும்?   அவர் நினைவோடு சந்தோஷமாக இருக்கிறேன் என்பாள்"பெண்களின் மணம் பெண்களுக்கே புரியாத புதிர் தான் போல் இருக்கிறது ,அன்பு செலுத்தவும் ,அன்பால் வெல்லவும் அவளால் மட்டுமே முடியும் என்பது எங்கள் அனைவரின் கருத்தாக இருந்தது  அவளைப் பார்த்த பிறகு .....

No comments:

Post a Comment