இன்று ஒரு மிக உண்மையான மனிதர்கள்,காதலர்கள் பற்றி சொல்லத் தோன்றுகிறது ,எனது உறவினரும் கூட,காதல்,அன்பு,அடர்த்தியான நேசம் எல்லாவற்றுக்கும் பெயர் இவர்கள் மட்டும் தான் என்று எனக்குத் தோன்றும் ,இன்று இருவரும் உயிரோடு இல்லை ...பெயர்களை சொல்லி இனம் காட்ட விரும்பவில்லை ....பெண் தாதி,ஆண் மருத்துவர் இருவரும் கல்லூரி படிப்பு முதல் காதல் செய்தனர் ,ஆண் பணக்காரர்,ஜாதி வேறு வேறு ,ஆணின் அம்மா சம்மதிக்கவில்லை ,ஆணுக்கு சிறுவயதிலேயே அப்பா தவறி விட்டார் ,அம்மா சம்மதிக்க மறுத்ததால் அவரைக் கஷ்டப் படுத்த இருவரும் விரும்பவில்லை ,பிரிந்தனர் ,அவர் அமெரிக்க சென்று விட்டார் ,பெண் chiristhava மதம் மாறி .தமிழ் நாட்டிலுள்ள ஒரு மலைப்பிரதேச சிற்றூரில் அங்குள்ள மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்தார் ,காலம் கடந்தது,பெண்ணுக்கு 38வது வயதில் கற்பபையில் கான்செர் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டு எடுத்து விட்டார்கள் ,40 வது வயதில் ஒரு நாள் அமெரிக்க சென்ற அந்த ஆண் திரும்ப வந்தார் அவர் அம்மா மறைவுக்கு ,பிறகு இந்த பெண் நண்பர்,காதலியைத் தேடிக் கண்டுபிடித்தார் ,திருமணம் செய்து கொண்டார் ,அதோடு அவரும் அதே கிராமத்தில் அவரோடு மதம் மாறி அங்கு சேவை செய்தார் ,பெண் நபரின் தம்பி மகளை தத்து எடுத்து வளர்த்தனர் ,படிக்க வைத்தனர்,அவள் தற்போது அதே கிராமத்தில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை ,இரண்டு பெண்பிள்ளைகளின் அம்மா ,அவர்கள் இருவரும் அந்த பெண்ணிடம் சிறு வயது முதல் தாங்கள் வளர்ப்பு பெற்றோர் ,என்று உண்மை சொல்லித் தான் வளர்த்து வந்தனர் ...வளர்கிறோம் என்பதற்காக அவளிடம் அவர்கள் இருவரும் பொய் சொன்னதில்லை ,அவளுடைய மற்ற சகோதரிகளை விட இந்த பெண் மிக நன்றாக இருக்கிறாள் என்று தான் சொல்ல வேண்டும் .......கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தான் இருவரும் ஒருவர் பின் ஒருவராக அதிகம் கஷ்டப் படாமல் ,மரணம் அடைந்தனர் .....காதல் என்றாலே கெட்ட வார்த்தை என்கிற பின்னணியிலிருந்து வந்த எனக்கு இவர்களைப் பார்க்கும் போது தான் அது ஒரு உண்மையான விஷயம் ,அது அனைவருக்கும் சாத்தியமும் இல்லை என்று எண்ணம் தோன்றியது .....

.jpg)
No comments:
Post a Comment