Friday, 9 August 2013
இன்று சிங்கப்பூரின் 48வது தேசிய தினம் ,ஒரு மிக சாதாரணமான மீன் பிடி கிராமமாக இருந்த ஒரு சிறு கடுகின் அளவு பரப்பளவு கொண்ட நாடு ,தீவு இன்று உலக அளவில் போட்டித்தன்மை மிக்கதாய் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாய் அமெரிக்காவின் dollarskku ஈடு கொடுத்துக் கொண்டு இருப்பது எப்போதும் எனக்கு மலைப்பாக இருக்கும் ,ஒரு தனி மனிதனின் சாதனை ,உழைப்பு ,அசைக்க முடியாத நம்பிக்கையின் சின்னம் சிங்கபுரின் தந்தை என்று அழைக்கப்படும் உயர் திரு லீ குவான் யு அவர்கள் ,இங்கு குற்றங்கள் குறைவு என்பதற்காக குற்றங்களே இல்லை என்று பொருள் படாது என்பது இந்த நாட்டின் தாரக மந்திரம் ,ஒரு தப்பு முளைக்கும் போதே ஒரு கை அல்ல ரெண்டு கை அல்ல 100 கைகள் கொண்டு கிள்ளி எறியப்படும் சட்டம் ,சமமான அளவு உரிமை ,திறமைக்கு முன்னுரிமை எங்கும் எதிலும் கடை பிடிக்கப்படும் ஒழுங்குமுறை ,மிக சரியான அளவு திட்டமிடுதல் செயல்படுத்துதல் இவையெல்லாம் காரணம் என்று சொல்லலாம் ,சிங்கப்பூரில் இருந்து பிழைக்க முடியாதவன் எங்கும் பிழைக்க முடியாது என்று நம்மவர்கள் வேடிக்கையாக சொல்வது உண்டு ,உண்மை உழைத்தால் ,படித்தால் கண்டிப்பாக முன்னேற முடியும் குடும்பத்தாரின் புரிந்துணர்வு மிக முக்கியம் இல்லையென்றால் குடும்ப வாழ்வு கொஞ்சம் சிரமம் என்று இங்குள்ள சில இளையர்கள் திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார்கள் ,அப்படியே திருமணம் செய்து கொண்டாலும் குழந்தை பெற்றுக் கொள்வதை விரும்புவதில்லை தற்போதைய சிங்கப்பூரின் பிரச்சனையும் அதுதான் அரசாங்கமும் அதற்க்கென நிறைய சலுகை திட்டங்களையும் அறிவித்து உள்ளார்கள் இங்கு அனைத்து ஆண் பிள்ளைகளும் ,2 வருடங்கள் தேசிய சேவை செய்ய வேண்டும் ,அது கட்டாயம் ,இந்தியாவிலும் அது போல் கொண்டு வந்தால் 10 பிள்ளைகள் கெட்டுப் போனாலும்2 பிள்ளையாவது உண்மையான நாட்டுப் பற்றோடு இருக்குமோ என்று எண்ணிக் கொள்வது உண்டு ...திரு லீ குவான் யு அவர்களின் மகன் திரு லீ சியாங் லூங் அவர்கள் தான் தற்போதைய பிரதமர் ,படிப்பிலும் திறமையிலும் ,முடிவு எடுப்பதிலும் ,மக்களோடு பழகுவதிலும் அப்பாவை விட அதிகமாய் பேசப்படுபவர் ,நேசிக்கப் படுபவர் ...குடும்ப அரசியல் என்று சொல்லப் பட்டாலும் சிறுதும் குறை காண முடியாத ,மக்களின் மீது உண்மையான அக்கறை கொண்ட அரசு என்றும் சொல்லலாம் ....
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment