Thursday, 1 August 2013

இன்று தாதியர் தினம் ...எனக்கு எப்போதும் நினைவுக்கு வருபவர் பூக்கார பொன்னம்மா,கிட்டத்தட்ட 8 வருடங்கள் பழக்கம் ,திருச்சி மாவட்டம் பக்கம் ஒரு கிராமம்  சொந்த ஊர் ,தினமும் இரவு 8 மணிக்கு எங்கள் வீட்டிற்கு பூ கொண்டு வருவார் ,ஒரு நாள் மிகவும் கோபம் அடைந்து இனிமேல் பூ வேண்டாம் என்று சொன்ன போது ,தன் நிலை சொல்லத் துவங்கினார் """எனக்கு தம்பியை மாப்பிள்ளை என்று சொல்லி  விட்டு ,படுத்த படுக்கையில் கிடந்த அண்ணனின் கையையைப் பிடித்து என் கழுத்தில் தாலி கட்டினார்கள் ,பின்பு தான் தெரிந்தது ,அண்ணன் பிறவியிலேயே மூளை வளர்ச்சி இல்லாதவர்,நடமாட முடியாதவர்,பேச முடியாதவர் என்பது ,இவர் இப்படி இருந்தால் தம்பியை யாரும் மணமுடிக்க வரமாட்டார்கள் என்பதால் ஏழையான என்னை என் அப்பா வாங்கி இருந்த கடனுக்காக இவருக்கு இல்லை இதுக்கு கட்டி வைத்து விட்டாரகள் வந்த அன்றே எனக்கும் இவருக்கும் ஒரு தனி ரூம் வீட்டுக்கு ஒதுக்குப் புறத்தில் கொடுத்துள்ளார்கள் நான் இவர்கள் வயக்காட்டில் வேலை செய்தால் தான் எனக்கு சாப்பாடு மற்ற என் செலவுகளையெல்லாம் நான் தான் சம்பாதித்துக்கொள்ள வேண்டும் நான் இருக்கும் உடல் நிலையில் என்னால் வேறு எந்த வேலையும் செய்ய முடியாது அதனால் தான் பூ விற்கிறேன் முதலில் அழுதேன் இந்த என் புருஷனை அடித்தேன் பிறகு எனக்கு மிகவும் பாவமாக இருந்தது இந்த ஆளைப் பார்க்க அடித்தாலும் அழுகாது அனால் கண்களில் இருந்து கண்ணீரா கொட்டும் பசித்தாலும் கேட்கத் தெரியாது நாமாக பார்த்து சாப்பாடு ஊட்ட வேண்டும்,குளிக்க வைத்து மலம்,சிறுநீர் எடுப்பது முதல் நான் தான் செய்ய வேண்டும் ,இவர் அம்மா சொந்த அம்மா தான் ஆனாலும் இந்த பக்கம் கூட வந்து எட்டிப் பார்க்கமாட்டார்கள் யாரோ ஜோசியக்காரன் சொன்னதால் இவரை கொல்லாமல்விட்டு விட்டார்களாம் முதலில் எனக்கு எங்காவது ஓடி போய் விடலாம் ,என்று தோன்றியது ,இல்லை சில சமயம் செத்துப்  போய் விடலாம் என்று தோன்றியது பிறகு இந்த ஆளை நினைக்கும் போது மிகவும் பரிதாபமாக இருக்கும் என் தலை விதி இப்படி இருக்கும் போது இந்த ஜீவனை என்ன சொல்ல முடியும்?எனக்கு வருடம் செல்ல செல்ல இவர் மேல் பாசம் வந்து விட்டது ,அவருக்கு என்னை அடையாளம் தெரிகிறது நான் வேலைக்கு போய் விட்டு வந்தால் வாய் லேசா சிரிக்கும் ,அந்த கண்ணில் பாசம் தெரியும் ,இவங்க வீட்டில் நான் இல்லாத போது இவர் மலம்,சிறுநீர் போய் அப்படியே கிடப்பதைப் பார்த்தால் இவரை அடிப்பார்கள் ,திரும்ப நான் போகும் போது அது சின்ன பிள்ளை போல எதோ அழுதுகிட்டே சொல்லறது மாதிரி செய்யும் அக்கா,அப்படியே என் மனசு உருகிப் போய் விடும் ,அதனால் தான் 3 மணி நேரத்துக்கு ஒரு தடவை ஓடிப் போய் அதைப் பார்த்து விட்டு சாப்பாடு தண்ணி குடுத்து விட்டு துடைத்து விட்டு விட்டு வருவேன் அக்கா அதுனால தான் இப்படி லேட்டா வருகிறேன் என்றார் ..
கேட்ட எனக்கு,எங்களுக்கு  மனம் ஆடிப் போய் விட்டது "
படிக்காத இந்த கிராமத்து மனுஷிக்குத் தான் எவ்வளவு பரந்த மனது ,தாலி கட்டி விட்ட ஒரே காரணத்திற்க்காக ஒரு காய்கறி நிலையில் இருக்கும் மனிதன் மேல் எவ்வளவு பாசம் ,பெற்ற தாயும் உடன் பிறந்த சொந்தங்களும் கூட கை விட்டு விட்ட நிலையில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இவர் செய்யும் சேவை எனக்கு அவரை கை எடுத்துக் கும்பிடலாம் போல்தோன்றியது ,தெய்வம் மனித ரூபத்தில் வரும் என்று படித்திருக்கிறேன் ,அன்று பார்த்தேன் ..பொன்னம்மா வடிவில் ....###காசு ,பணம் ,நகை சொத்து ,அழகு ,பதவி என்று வெறி பிடித்து அலையும் மனிதர்கள் மத்தியிலும் இது போல் சிலர் வாழ்வதால் தான் உலக உருண்டை கடலுக்குள் மூழ்கி விடாமல் இருக்கிறது என்று எப்போதும் நினைத்துக் கொள்வேன் ......

No comments:

Post a Comment