Thursday, 15 August 2013
இன்று இந்திய சுதந்திர தினம் ..சிலருடைய பதிவுகளைப் பார்க்கையில் மிகவும் வருத்தமாக இருக்கிறது ,கொலையும்,கொள்ளையும்,கேடு கெட்ட அரசியல் வாதிகளும்,சட்டங்களும் ,ஊழல்களும் ,பசியும் பஞ்சமும் எந்த நாட்டில் இல்லை ?இன்றைய நிலைக்கு நாமும் தெரிந்தோ,தெரியாமலோ ஒரு விதத்தில் காரணம் என்பதை எல்லோரும் சுலபமாக மறந்து நாட்டின் மீது பழி சுமத்துவது எந்த வகையில் நியாயம்?நாடு என்பதே நாம் தானே ,அனைத்து இயற்கை வளங்களும் அழிவதும் நம் மனித இனத்தால் தானே?எனக்கு எப்போதும் நான் என்றும் ஒரு இந்தியன் என்கிற பெருமை இருக்கும் ,அந்த நாளில் எங்கள் வீட்டிலும் ,நான் நினைக்கிறேன் கண்டிப்பாக நம் அனைவர் வீடுகளில்ருந்தும் யாரவது ஒருவர் (நம் மூதாதையர்)இந்த சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்து இருந்திருப்பார் ,அதற்க்கு நாம் கொடுக்கும் மதிப்பு இது தானா?அந்த நாடு எனக்கு கல்வி கொடுத்தது ,எங்களை வளர்த்தது ,அந்த கல்வி,அந்த அனுபவம் தான் எங்களை இங்கு வாழ வைக்கிறது என்கிற நன்றி இப்போதும் உண்டு,ஒருசில நிகழ்வுகளை வைத்து நம் நாட்டை நாம் தாழ்வாக எண்ணலாமா?எல்லா துறைகளிலும் இன்று நம் இந்திய பிள்ளைகள் நன்கு செய்கின்றனர்,அனைத்து உலக நாடுகளிலும் நம் இந்தியர்கள் மிகப் பெரிய பதவி வகிக்கின்றனர் ,இந்தியா இன்று மிகப் பெரிய அளவில்,மிக விரைவாக முன்னேறிக் கொண்டு இருக்கும் ஒரு தவிர்க்க முடியாத சக்தி என்று உலக நாடுகள் ஒருவித கலக்கத்தோடு கைகோர்க்க முன்வருகின்றனர் ,இந்தியாவை உற்றுப்பார்க்க துவங்கி உள்ளனர் இது எப்படி சாத்தியம்?இது நம்மால் தானே?நம் இந்திய மக்களால் தானே?இங்கு சீனர்கள் வியந்து கேட்பார்கள் "எப்படி இந்தியர்கள் கணினி,கணக்கு,மருத்துவம்,சட்டம் ,கலைகள் என அனைத்துத் துறைகளிலும் மிக நன்றாக செய்கிறார்கள் என்று?"இங்கும் மிக பெரிய பதவியில் இந்தியர்கள் இருப்பார்கள்,இருக்கிறார்கள்,அங்கிருந்து விட்டு இப்போது நான் இந்திய செல்லும் போதெல்லாம் வியந்து போவது உண்டு விமான நிலையம்,தொலைத் தொடர்பு,வாகனங்களின் வசதி,பெருக்கம்,ஆங்கிலப் புலமை,என்று ஒவ்வொரு விதத்திலும் மாற்றம் காண முடிகிறது,சுதந்திர தினத்தை நினைத்து பெருமைப் படவில்லை என்றாலும் சிறுமைப் படுத்தாமல் இருக்கலாம் தானே?இருப்போம்,..அட்லீஸ்ட் 100000 ஊழல்கள் இருந்தாலும் கண்டிப்பாக 10 நல்ல மனிதர்கள் ,உள்ளங்கள்,இன்றும் நம்மிடையே உண்டு அவர்களுக்காக .....வாழ்க பாரதம் .....
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment