Tuesday, 27 August 2013

நண்பர்களைப் பற்றி படிப்பது ,பேசுவது ,நண்பர்களோடு இருப்பது எல்லோருக்கும் பிடித்த ஒன்று ,எத்தனை பேர் நண்பர்கள் மூலம் பாடம் கற்றுக் கொண்டுள்ளோம்??வாழ்க்கையில் மறக்க முடியாத பாடம்,கதைகளில் வருவது போல் நிஜத்திலும் நடந்த உண்மைப் பாடம்....
என்னோடு அலுவலகத்தில் ஒன்றாக வேலை பார்த்த இரு இணைபிரியாத தோழியர்கள் அவர்கள்,எப்போதும் ஒன்றாக இருப்பார்கள்,வேலை நேரம் கூட இருவருக்கும் ஒன்றாக வரும் படி வாங்கிக் கொள்வார்கள் ,சாப்பாட்டு நேரம்,ஓய்வு நேரம் ரெண்டு பேரையும் தனித்து பார்க்க முடியாது ,நிறைய பேசுவார்கள்,சிரிப்பார்கள்,அவர்களில் ஒருவர் என்னோடு பஸ்சில் வருபவர் ,அதிகம் பேசிக் கொள்ள மாட்டோம் என்றாலும் முறைத்துக் கொள்ளவும் மாட்டோம் காரணம் அவர் எங்களை விட சீனியர் என்பதும் தான் ,எனக்கு அந்த தோழிகள் இருவரையும் சேர்த்துப் பார்க்க பிடிக்கும்,இருவரும் வெவேறு இனம் ,மதம் அழகானவர்களும் கூட,ஆனால் ஒரு நாள் இரவு எங்கள் வீட்டுக் கதவு தட்டப் பட்டு ,கத்தல் கேட்கும்  வரைஎனக்குத் தெரியாது என்னோடு வரும் பெண்ணின் மற்றொரு முகம்,ஆம்,அந்த பெண் யாரோ ஒரு நபருடன் ஓடிப் போய் விட்டது  ,நான் பஸ்சில் அந்த பெண்ணோடு போவதால் எங்கள் வீட்டில் வந்து சத்தம் போட்ட்டனர் அந்த பெண்ணின் உறவினர்கள் ,எப்போதும் பாவம் ஓரிடம்,பழி ஓரிடம் தானே?ஒரு வழியாக அவர்கள் சென்றவுடன் அடுத்த நாள் காலை அலுவலகம் போன பின்பு தான் முழுக் கதையும் தெரிந்தது ,அவர் ஓடிப் போனது அந்த மற்றொரு தோழியின் காதலரோடு என்று ,தன தோழியின் காதலுக்கு தூது போன இவர் கொஞ்ச காலம் ஆனதும் அவரை கழற்றி விட்டு இவர் அவரை விரும்பி இருக்கிறார் ,பழகி இருக்கிறார் அந்த தோழிக்கு தெரியாமல் ஏனென்றால் அந்த நண்பி வீட்டில் அதிகம் கட்டுப்பாடு என்பதால் அவரால் அதிகம் வெளியில் செல்ல முடியாது ,பேச முடியாது இதை இவர் தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு விட்டார் ...இந்த தோழியை அலுவலகத்தில் பார்க்க மிகவும் கஷ்டமாக இருந்தது அவர் நிலை ...கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் வரை லீவில் இருந்தார் ...மறுபடி அவரைப் பார்க்கும் போது புரிந்தது ,உண்மை அன்பு அவரை எந்த அளவுக்கு கொண்டு போய் விட்டுள்ளது என்று??ஆனால் ஓடிப் போன பெண்ணோ ,சிறிது காலம் கழித்து அந்த நபருடன் இதே ஊருக்கு மாற்றல் வாங்கி வந்து தனிக் குடித்தனம் செய்து கொண்டு இருந்தார் ..சந்தோஷமாக.....எனக்கு அவரைப் பார்க்கும் போது இன்னும் சிரிக்க கூடத் தோன்றுவது இல்லை ..

No comments:

Post a Comment