மேகங்கள் கடந்து போவது போல் நாட்களும் மனிதர்களும் நம்மைக் கடந்து செல்கின்றனர் ,நாமும் கடந்து வருகிறோம் என்றாலும் சிலர், சிலர் மட்டும் காலங்கள் கடந்தும் தம் நினைவை நம்மிடம் பதிவு செய்து விடுவது உண்டு ,அப்படி ஒருவர் என் ஒவ்வொரு பயணத்திலும் என்னை நினைக்க வைத்தவர் ,வைத்துக் கொண்டும் இருப்பவர் நன்றியோடு ..
குற்றங்கள் இங்கும் உண்டு ,அதற்க்கான தண்டனையும் உடனடியாக உண்டுவயது ,இனம் நாடு என்று எந்தவித பாரபட்சம் இல்லாமல் ..இது நான் சிங்கப்பூரில் கண்ட உண்மை ..குற்றம் நிரூபிக்கபட்ட உடன் தண்டனை நிறைவேறும் பிறகு முழு செய்தியும் வெளியில் வரும் ,வந்த முதல் ஆண்டே ஒரு மரண தண்டனை நிறைவேற்றப் பட்ட செய்தி கேட்டு
கொஞ்சம் ஆடித் தான் போனேன் ...
நானும் என் பிள்ளைகளும் மட்டும் திருச்சியிலிருந்து சிங்கப்பூர் ...வரும் நாள் இது நடந்து ஒரு 10 ஆண்டுகள் ஆகி விட்டது ,நான் எப்போதும் பயணத்தின் போது குறிப்பிடப்பட்டிருக்கும் அளவிற்கு உள்ளாகவே luggage
எடுத்துச் செல்வீது உண்டு இங்கு அனைத்துப் பொருட்களும் கிடைப்பதால் வீணாக தூக்கிக் கொண்டு வருவதை தவிர்த்து விடுவேன் ,அப்படித்தான் அன்றும் checkin பண்ணுவதற்கு நின்று கொண்டு இருந்தபோது ஒரு பெண்மணி நடுத்தர வயது என்னிடம் வந்து தானும் சிங்கப்பூர் வருவதாகவும் தன luggageil ஒரு mixie மட்டும் நான் என் luggageodu போட்டு விடுகிறேன் என்று கொஞ்சம் கெஞ்சினார் சரி ஒரே ஊர்ர்க்காரர் என்று சொல்லி என்னை சம்மதிக்க வைத்து விட்டு என் luggageodu வைத்து விட்டார் ,என் முறை வரும் போது என்னை உள்ளிருந்து ஒரு உயர் அதிகாரி அழைப்பதாகச் சொன்னார்கள் ,போனேன் கொஞ்சம் பயம் கலந்த ஆச்சரியம் என்னவோ எதோ என்று தான் அவர் ""அம்மா ,நீங்கள் என் மகள் போல் இருப்பதால் சொல்கிறேன் இந்த luggage எடுக்க வேண்டாம் உங்களுக்கு தெரியாது இதில் என்ன இருக்கிறது என்று இல்லையா?அவர் சொன்னதை வைத்து நீங்கள் ஒத்துக் கொள்ள வேண்டாம் ,எங்கு எப்போது யார் எதைக் கடத்துவார்கள் என்று கண்டு பிடிப்பதும் ,நம்புவதும் கஷ்டம் ,அவர் mixiein உள்ளே ஏதாவது வைத்து இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்??நீங்கள் செல்வதோ சிங்கப்பூர் ,மிகக் கடுமையான சட்டம் உள்ள நாடு யார் வந்து சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் ,உங்களைப் பார்த்தல் நீங்கள் தப்பு செய்யமாட்டீர்கள் ..என்று இந்தியாவில்நம்புவார்கள் ,ஆனால் அங்கு எந்த ஒரு நாட்டு வேண்டுதலும் எடுபடாது "என்று சொல்லி என்னோடு வந்து அந்த பெண்ணின் luggageai மட்டும் எடுத்து அவரே முடியாது என்று சொல்லி அந்த பெண்ணிடம் திருப்பிக் கொடுத்து விட்டார் ...இன்று கூட ஒரு செய்தி நேற்று மலேசியா ஆடவர் இருவர் அவர்களது வாகனத்தில் அளவுக்கு அதிகமாக போதைப் பொருள் வைத்து singaporekkul கடத்த இருந்ததாக இங்கு கைது .குற்றம் நிருபிக்கப் பட்டால் மரண தண்டனை என்றார்கள் இன்றும் அவரை ,அந்த உயர் அதிகாரியை நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன் ....####நல்ல உள்ளங்களும் ,மனிதர்களும் எங்கும் உண்டு நம் கண்களில் படுவது குறைவு அவ்வளவுதான் ....

No comments:
Post a Comment