Thursday, 29 August 2013

இன்று எங்கள் ஊரில் "அர்ப்பண நாள் "...காலையிலிருந்து எல்லோரும் வானொலி,தொலைகாட்சி வழி பாட்டு விரும்பிக் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள்,அதிகம் அம்மாவுக்கும்,மனைவிக்கும்,தோழனுக்கோ,தோழிக்கோ கேட்பது குறைவு தான் ,நாம் தான் சுயநலப் பிம்பங்கள் ஆச்சே,அவர்கள் இருவர் மட்டும் தான் எப்போதும் நம் நினைவில் வருகிறார்கள்,நாம் ரொம்ப நல்லவங்க என்று வேறு காண்பிக்க வேண்டும் அது ரொம்ப முக்கியம்,....எனக்கு இந்த நாளில் என்றும் நினைவுக்கு வருபவர் எனது இனிய தோழி ,அப்போது நான் இந்த நாட்டுக்கு வந்து 2 வருடங்கள் இருக்கும் ,பள்ளியில் பிள்ளையை அழைத்து வரும் போது,பார்த்து பேசிக் கொள்வோம்,பிறகு அது மறக்க முடியாத குடும்ப பிணைப்பாக ஆனது ,அவருக்கு 1 ஆண்,1 பெண் என ரெண்டு பிள்ளைகள்,தோழி பல் மருத்துவரும் கூட,ஆனால் இங்கு அவர் வேலை பார்க்கவில்லை ,ஒரு நாள் திடீரென்று என் கைகளைப் பிடித்து அழுதபடி சொன்னார் "நாங்கள் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும் ,6மாதங்களுக்குள்  என்றார் "கேட்ட போது "நாங்கள் 2 வருடங்களுக்கு முன் ஒரு பிறந்த நாள் பார்ட்டி போயிருந்தோம் ,அப்போது எல்லோரோடும் புகைப் படங்கள் எடுத்துக் கொண்டோம்,அதில் இருந்த யாரோ ஒருவர் இந்த அரசால் சந்தேகப் படும் வட்டத்துக்குள் இருப்பதால் அன்று அங்கு வந்து இருந்த அனைவருக்கும் இது போல் ஒரு ஓலை வந்து உள்ளது என்றார் ,அந்த 6 மாதத்திற்குள் அவர் வீடு விற்று ,குறைத்த விலைக்கு ,கணவரோடும்,பிள்ளைகளோடும் கண்ணீரோடு போகும் போது என்னிடம் சொன்னது இப்போது நினைக்கும் போதும் எனக்கு கண்ணீர் துளிர்க்கும்,""நாங்கள் தமிழ் மொழி பேசுபவராய் பிறந்ததைத் தவிர வேறு பிழை ஏதும் செய்யவில்லை ""

No comments:

Post a Comment