Thursday, 8 August 2013
என் நெருங்கிய தோழி மிகவும் வருத்தப்பட்டார் தங்களை புலம் பெயந்தவர்கள் ,அகதிகள் என்று மற்றவர்களால் அழைக்கப்படுகிறோம் என்று ,நான் யோசித்தேன் எங்களைப் போன்றவர்களுக்கு என்ன பெயர்??பிறந்தது ,வளர்ந்தது ,படித்தது ,மணம் செய்து கொண்டது அனைத்தும் ஒரு நாடு,வளர்சிக்காக (பணத்திற்காக) வந்தது ஒரு நாடு ,முதலில் நம் பிரிவுக்காக வருத்தபப்டும் உறவுகள் பின்னர் பணம் என்கிற விஷயத்திற்காக மட்டும் நம்மை நினைப்பார்கள்,நாம் இங்கு இருந்து கொண்டு அங்கு இருப்பவர்களை வளர்ப்போம் ,விடுமுறைக்கு சொந்த நாட்டிற்கு போவோம் எவ்வளவோ ஆசைகளை மனதில் சுமந்து ,அங்கோ நீங்கள் கொண்டு வரும் பொருள் பொறுத்து மதிக்கப் படுவீர்கள் ,எப்போதோ வந்து தங்கப் போகும் ஆசையில் நாங்கள் அங்கு அவர்கள் வசிக்க வீடுகள் வாங்குவோம்,சில சமயங்களில் வீட்டு பெயர்கள் கூட அவர்கள் பெயர்களில் பதிவு செய்து ஏமாந்து போனவர்கள் கதையும் உண்டு ,பிள்ளைகள் இந்த நாட்டில் படித்து வளர்வார்கள் ,ஒரு கால கட்டத்தில் அங்கு செல்லவே பிரியப் பட மாட்டார்கள் ,உறவுகள் தரும் ஏமாற்றம்,பிள்ளைகளின் வளர்சிக்காக இங்கு நம்மை நிரந்தரமாக தங்க முடிவு எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ள வைத்து விடும் ,இங்கு பிறந்தவர்களோ நம்மை போட்டியாக நினைக்க துவங்கி விடுவார்கள் ஒரு கால கட்டத்தில் ,நம்மால் முழுவதும் மாற முடியாமல் ,அங்கு இருப்பவர்களை மறக்கவும் முடியாமல் ஒரு வாழ்க்கை இங்கு வந்து தங்கி விட்ட அனைவருக்கும் ..ஒருமுறை இந்த நாட்டின் பிரதமர் சொன்னார் ""இங்கு வந்து வீடுகளில் முதலீடு செய்து விட்டு வெளி நாடுகளில் வசிக்கும் அனைவரும் ,இந்த நாட்டின் காற்றைத்தான் வாங்கிக் கொண்டு செல்கிறார்கள் என்று தான் சொல்வேன் "என்றார் ,உண்மைதானே எங்கள் நிலையும் அது போலத் தான் என்பேன் நான் ,நீங்கள் போரின் காரணமாக உங்கள் நாட்டில் இருந்து வெளியேறியவர்கள் ,நாங்கள் விருப்பப் பட்டு வெளியேறி "திரிசங்கு சொர்க்கத்தில் வசிப்பவர்கள் "அதனால் யாரும் யாரையும் சொல்வதற்கு அருகதை அற்றவர்கள் பெண்ணே என்றேன் ....
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment